தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பா.ஜக! சிலம்பத்தில் உலக சாதனை முயற்சி செய்த பா.ஜ.க!

தமிழகத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்று சிலம்பம். பல நூறு ஆண்டு பழமையான இந்த விளையாட்டை ஆண்டு தோறும் பல நூறு மாணவர்கள் மட்டுமே கற்று வருகின்றனர்.மேலும் இதன் மீது ஆர்வம் குறைந்து வருகிறது.

இதனை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் சிலம்பத்திற்கு அங்கிகாரம் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து பாஜக சார்பில் சிலம்பாட்டத்தை, ‘கேலோ இந்தியா’ எனப்படும் விளையாட்டு வளர்ச்சிக்கான தேசிய திட்டத்தில் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் உலக சாதனை முயற்சியாக ஒரே நேரத்தில், 100 சிலம்பாட்ட ஆசான்கள், 1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் கூடி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இரண்டு லட்சம் முறை சிலம்பத்தை சுழற்றியுள்ளனர். இது, ஒரு உலக சாதனை முயற்சி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியானது சென்னை கொன்னுார் காந்திநகர் காலனியில் நேற்று நடந்தது. தமிழகம் முழுதும் இருந்து வந்திருந்த, சிலம்பாட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் கலந்து கொண்டு பேசினார்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது: சிலம்பத்தின் வயது நமக்கு தெரியாது. அகத்திய முனிவர் எப்போது வந்தாரோ, அப்போதே சிலம்பாட்ட கலையும் வந்தது. தமிழகத்திற்கு எவ்வளவு வயதோ, அவ்வளவு வயது சிலம்பத்திற்கு.

நம் பாரம்பரியத்தை விளையாட்டின் வாயிலாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால், சிலம்பத்தால் மட்டுமே முடியும்.அதனால் தான், கேலோ இந்தியாவில், சிலம்பாட்டதை பிரதமர் மோடி சேர்த்து இருக்கிறார். இது, எட்டு கோடி தமிழர்களுக்கு கிடைத்த கவுரவம். இனி, இந்த விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்று காட்டுவோம்.

பிரதமருக்கு நன்றி தெரிவிக்க, உலக சாதனை முயற்சியாக ஒரே நேரத்தில், 100 சிலம்பாட்ட ஆசான்கள், 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கூடி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இரண்டு லட்சம் முறை சிலம்பத்தை சுழற்றியுள்ளனர். இது, ஒரு உலக சாதனை முயற்சி.இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version