உதயநிதி அவர்களே இப்போ கீழ்த்தரமாக பேச முடியுமா! நீட் தேர்வு எழுத மாணவர்கள் தயாராகுங்கள் முதல்வர் வேண்டுகோள்!

காங்கிரசும், திமுகவும் ஆயிரமாயிரம் முறை மறுத்தாலும் இந்தியாவில் நீட் திணிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் & திமுக கூட்டணி அரசு தான் காரணம் ஆகும். நீட் தேர்வு செல்லாது என்று 2013ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அத்தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ததும் காங்கிரஸ் & திமுக கூட்டணி அரசு தான். அப்போது தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் அடிப்படையில் தான் நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நீட் தேர்வு சட்ட அங்கீகாரம் பெற்றதற்கு இந்தத் தீர்ப்பு தான் காரணமாகும். அந்த வகையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக அரசுக்கு இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்து விட்ட நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக ஒரு குழுவை மட்டும் அமைத்தது. அந்த குழுவிற்கு நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு,‘‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பான தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளதே? இதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?’’ என கேள்வி எழுப்பினர். அன்றைய தினமே தெரிந்துவிட்டது நீட் நடக்கும் என்று.

திமுகவின் பிரச்சார முழக்கம் நீட் தேர்வு ரத்து, தான் சட்டமன்ற கூட்ட தொடரின் முதல் கையெழுத்து என திமுக தலைவர் பிரச்சாரம். நீட் தேர்வை எப்படி ரத்துசெய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அந்த ரகசியத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்து காட்டுகிறோம். அடிமை அரசாக இருக்காது என உதயநிதியின் பில்டப் வேற லெவலில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நீட் ரத்து செய்வார்கள் என மக்களை நம்ப வைத்தார்கள் தி.மு.கவினர்.

ஆனால் தமிழக முதல்வர் நேற்றைய தினம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதில் இந்த ஆண்டு நீட் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் நீட் தேர்வை விலக்கு பெறும் சட்ட நடவடிக்கை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது வருத்தத்துக்குரியது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற கொள்கை உள்ள மாணவ மாணவிகள் நீட் தேர்வுவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்ப் பார்க்கவில்லை.‌அவர்கள் எப்பொழதோ அவர்கள் நீட் பயிற்சி மையங்களை அனுகி நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதனால் இந்த ஆண்டு நீட்தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு அவர்களுகாகு அதிர்ச்சியை கொடுக்கவில்லை.

இதை வைத்து அரசியல் செய்தவர்களுக்குத் தான் அதிர்ச்சி கொடுத்துள்ளது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கணவுகளோடு இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி விட்டனர் என்பதே உண்மை. இதற்காக முதல்வர் வருந்த வேண்டிய சூழ்நிலை எதுவும் இல்லை.

அதே சமயம் அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கு7.5% இட ஒதிக்கீட்டை மு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமாக்கினார் இதுதான் இப்பொழுது கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் போகிறது.கலைஞர் கருணாநிதி அவர்களின் தாரக மந்திரமான’ சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்’ என்ற கொள்கையில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீண்ட தூரம் பயணித்துக் கொண்டு இருக்கிறார்.

மேலும் உதயநிதி அவர்கள் கூறிய ரகசியம் என்ன ஆச்சு திரு ஸ்டாலின் அவர்களே தேர்தலின் போது அவ்வளவு ஆக்ரோஷமாக பேசிய தி.மு.க எங்கே சென்றது. அதிமுகவை கீழ்த்தரமாக விமர்ச்சித்த திமுகவினர் எங்கே சென்றார்கள். நீட் தேர்வை ரத்து என்பது நடக்காத ஒன்று என்பது எல்லாருக்கும் தெரியும். தெரிந்தும் ஓட்டிற்காக மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய திமுக அரசு மக்களுக்கு எந்த நம்பிக்கை அடிப்படையில் நல்லது செய்ய போகிறது. என்பதை பொருத்துத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Exit mobile version