சீனா வைரஸ் கொரோனவை கட்டுப்படுத்த வருகிறது குளோரோகுயின்! கொரோனாவின் கொட்டத்தை அடக்குமா!

கொரோனாவின் கொடூர தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த நோய் தொற்றானது பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கிட்டதட்ட 10000 பேரை காவு வாங்கிவிட்டது. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தொற்று நோயினை கட்டுப்படுத்தவும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் உலகின் பல நாட்டு தலைவர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். நோயிலிருந்து மக்களை காக்கும்வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளும் செயல்படுத்திவருகின்றன.

இந்த கொடூர தொற்று நோயினை அழிப்பது மட்டுமின்றி அதிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டுமெனில் அரசு மட்டுமின்றி மக்களும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் உலகமே இறங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர் ஒருவர் அம்முயற்சியில் வெற்றியும் கண்டதாக தெரிவித்துள்ளார்.

டிடியர் ரவுல்ட் என்ற பேராசிரியர் பிரான்சில் உள்ள ஒரு தொற்றுநோய் மருத்துவமனையில் தொற்றுநோய் சிறப்பு பிரிவின் தலைவராக உள்ளார். கொரோனா தடுப்பு மற்றும் சாத்தியமான சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய பிரெஞ்சு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்

கொரோனா ஆய்வு குறித்து அவர் கூறியதாவது : பிரான்சின் தென்கிழக்கில் முதன்முதலில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான 24 நோயாளிகளுக்கு குளோரோகுயின் என்ற மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 600 எம்சிஜி வழங்கப்பட்டு மருந்தின் தன்மை மற்றும் பக்க விளைவுகள் ஆகியவை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

பின் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதை கண்டறிய முடிந்தது. மேலும் குளோரோகுயின் என்ற மருந்து பொதுவாக மலேரியாவைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது – இது பிளாக்கெனில் என்ற பெயரிடப்பட்ட மருந்து வழியாக நிர்வகிக்கப்படுகிறது.

தொடர்ந்து, பிளாக்கெனில் ( குளோரோகுயின்) மருந்து பயன்படுத்தாக நோயாளிகளின் உடல்நிலையில் தொற்றுநோய் இருப்பதும் முன்னேற்றிம் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. குளோரோகுயின், பாஸ்பேட் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவை சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முன்னர் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

அமெரிக்க ஆய்வு

கொரோனா குறித்து அமெரிக்காவிலும் சில விஞ்ஞானி ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த ஆய்வில் கூறப்பட்டதாவது : குளோரோகுயின் ஒரு சிறந்த சிகிச்சையாகத் தோன்றியது என்றும், பிரான்சின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போவதாகவும் தெரிகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு குளோரோகுயின் பயன்பாடு சாதகமான விளைவுகளைக் காட்டுகிறது. ஆய்வகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு முற்காப்பு (தடுப்பு) நடவடிக்கையாக குளோரோகுயின் வலுவான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது., அதே நேரத்தில் ஒரு தடுப்பூசி உருவாக்கப்படுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். குளோரோகுயின் என்பது மலிவான, உலகளவில் கிடைக்கக்கூடிய மருந்து. இது மலேரியா, ஆட்டோ இம்யூன் மற்றும் பல்வேறு நிலைமைகளுக்கு எதிராக 1945 முதல் பரவலாக மனித பயன்பாட்டில் உள்ளது. இது அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையிலானது. வைரஸ் பரவாமல் தடுக்க பிரெஞ்சு அரசாங்கம் சுகாதார ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் பின்வருவன அடங்கும்:

இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தாக குளோரோகுயினை பயன்படுத்தலாம் என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கான ஆய்வுகளும் நடத்த திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் ஒப்புதல்களை விரைவுபடுத்த விரும்புகிறேன். அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை, ஆனால் உலகெங்கிலும் உள்ள மருத்துவ ஆய்வாளர்கள் குளோரோகுயின் உட்பட பரவலாக கிடைக்கக்கூடிய பல மருந்துகளைப் ஆய்வு செய்து வருகிறார்கள். குளோரோகுயின் ஒரு கேம் சேஞ்சர். இது பொதுவாக பாதுகாப்பானது மற்றும் லேசான முதல் மிதமான அளவுகளில் நன்கு செயல்படுகிறது.

டிரம்ப்

Courtesy : Dinamalar

Exit mobile version