கடந்த திமுக ஆட்சியில் 5 புதிய மது ஆலைகளுக்கு அனுமதி! 11 மது ஆலைகளில் 7 திமுக ஆதரவாளர்களுடையது – உண்மையை உடைத்த மருத்துவர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குத்துவிளக்கு குறித்து அண்ணாவின் மதுவிலக்கு உறுதியும், தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும் என்ற தலைப்பில் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் 11 மது ஆலைகளில் 7 மது ஆலைகள் திமுகவுக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்று திமுகவை புரட்டி போட்டுள்ளார்.

பாமக இரண்டு அதாவது திமுக அதிமுக என மாறி மாறி கூட்டணியில்இருந்தாலும் மதுவிலக்கு கொள்கையிலிருந்து விலகவில்லை. கூட்டணி கட்சி ஆட்சி செய்தலும் விமர்சிக்க தவறமாட்டார். நல்லது செய்தால் பாராட்டுவர். விமர்சிப்பதில் வித்தகர். அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. இரண்டையும் விமரிசிக்க தவறமாட்டார்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுவிலக்கை பற்றி பேசினார்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொரோனா இரண்டாவது அலை காரணமாக 2வது முறையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது மதுக் கடைகள் திறக்கப்பட்டன. இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவை விமர்சித்து முகநூல் பக்கத்தில் , அண்ணாவின் மது விலக்கு உறுதியும் தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும் என்ற தலைப்பில் அறிக்கையை பதிவிட்டுள்ளார். அதில், இன்று தமிழ்நாட்டில் இருக்கும் 11 மது ஆலைகளில் 7 மது ஆலைகள் திமுகவுக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்ற தகவலையும் சேர்த்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது:

அன்று அண்ணா – மதுவை தடுத்த வரலாறு!

‘மதுவிலக்கு இல்லாவிட்டால், நிலைகுலைந்து தள்ளாடும் நபர்களை பார்க்க நேரிடும். இப்போது அது இல்லை. இந்த நிலையை நான் வரவேற்கிறேன். இன்று எத்தனையோ குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு, தாய்மார்களின் மகிழ்ச்சிக்கு மதுவிலக்கே காரணம்’ என்று கூறி மதுக்கடைகளை திறக்கும் யோசனையை அண்ணா நிராகரித்தார்.

இன்று – மதுவுக்கு சாமரம்

அண்ணாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் 1971-ஆம் ஆண்டில் மதுக்கடைகளை திறந்தார். அதுமட்டுமின்றி 2006 -11 ஆட்சிக் காலத்தில் 5 புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளித்தார். தமிழ்நாட்டில் இப்போது செயல்பாட்டில் உள்ள 11 மது ஆலைகளில் 7 மது ஆலைகள் திமுகவுக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது!” என கடுமையாக சாடியுள்ளார் ராமதாஸ் அவர்கள்..

Exit mobile version