வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரம்: விரைவில் துவங்குது விசாரணை !

வாரணாசி உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை, இந்திய தொல்லியல் துறையின் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த கோரிய மனுவை, வாரணாசி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் அருகே, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் பல ஹிந்து கடவுள்களின் சிலைகள் உள்ளன.

இங்கு ஆண்டு முழுதும் வழிபாடு நடத்தஅனுமதி அளிக்க கோரி, ஹிந்து பெண்கள் ஐந்து பேர், மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதையடுத்து, மசூதிக்குள், ‘வீடியோ’ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போது, அங்கு சிவலிங்க வடிவிலான பொருள் இருப்பது தெரிய வந்தது.

அது, சிவலிங்கம் தான் என, ஹிந்துக்கள் தரப்பில் வாதிடப்பட்டது.அதை தொல்லியல்துறை ஆய்வுக்கு உட்படுத்த வைக்கப்பட்ட கோரிக்கையை, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்த சிவலிங்க வடிவ பொருளை, இந்திய தொல்லியல் துறையினரின் அறிவியல்பூர்வஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டது.மேலும் இது தொடர்பான விசாரணையை தொடரும்படி, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதை தொடர்ந்து, ஞானவாபி மசூதி முழுதும், தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி, ஹிந்துக்கள் தரப்பில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் தாக்கல் செய்த மனுவை, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.இந்த மனு மீது வரும் 19ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, ஞானவாபி மசூதி கமிட்டிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.வழக்கு விசாரணை வரும், 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.


Exit mobile version