கோவில் நகைகளை உருக்க கூடாது உயர் நீதிமன்றம் அதிரடி! இந்து அமைப்புகள் வரவேற்பு!

வருமானம் வரும் தமிழக இந்து கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பல கோவில்களில் நகைகளை காணிக்கையாக செலுத்துவார்கள். இந்த நிலையில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றி, அதனை வைப்பு நிதியில் வைத்து வரும் தொகையை பயன்படுத்தி கோவிலுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என ஊர் அறிவிப்பை வெளியிட்டார் . இதனை தொடர்ந்து அதற்கான அரசு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்து கோவில்களின் நகைகளை உருக்க உத்தரவிடும் அதிகாரம் ஆணையருக்கோ, அமைச்சருக்கோ, அல்லது முதல்வருக்கோ கிடையாது. அவ்வாறு உத்தரவிட்டது அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட செயல் என்று என இந்து ஆதரவாளர்கள் கூறி வந்தார்கள் மேலும் பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச்.ராஜா அண்ணாமலை தெரிவித்து வந்தார்கள்.

கோவில் நகைகள் உருக்கப்படுவது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோவில்களில் அறங்காவலர்கள் பணி நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கோவில் நகைகளை உருக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறினார். இதனை கருத்தில் எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு, அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜக தலைவர்கள் இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளார்கள். அறங்காவளர் குழுவிற்கு மட்டுமே உண்டு என்கிற நம் சட்டப் புரிதலை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இது வழக்கு தொடர்ந்த இந்து உணர்வாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் தீர்ப்பு. கடந்த ஐந்து மாதங்களாக இந்து கோவில்கள் தொடர்பாக தொடர்ந்து சட்ட விரோதமாகவும் கோவில்களை சிதைக்கும் நோக்குடனும் செயல்படும் போக்கை திமுக அரசு நிறுத்திக் கொள்ளும் என எதிர் பார்ப்போம் எனஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

Exit mobile version