நான் பின்வரும் ஏழு விஷயங்களில் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்- பிரிதமர் மோடி.

முதல் விஷயம்-

உங்கள் வீடுகளில் உள்ள முதியவர்கள், குறிப்பாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தனிப்பட்டகவனம் செலுத்துங்கள். அவர்களைக் கொரோனோவைரஸ் நோயிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக வைத்திருக்க, நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இரண்டாவது விஷயம்-

ஊரடங்கின் லட்சுமணக் கோட்டையும், தனி நபர் விலகலையும்  முற்றிலுமாகப் பின்பற்றுங்கள். தவறாமல், வீடுகளில் செய்யப்பட்ட முகக்கவசங்களை தயவு செய்து பயன்படுத்துங்கள்.

மூன்றாவது விஷயம்-

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் பிறப்பித்துள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள். அவ்வப்போது, வெந்நீரை உட்கொள்ளுவதுடன், கொப்பளிக்கவும் செய்யவும்.

நான்காவது விஷயம்-

கொரோனோ தொற்று பரவாமல் தடுக்க ,ஆரோக்கிய சேது கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யவும். இதேபோல, இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மற்றவர்களை ஊக்குவிப்பு செய்யுங்கள்.

ஐந்தாவது விஷயம்-

உங்களால் இயன்றவரையில், ஏழைக் குடும்பங்களுக்கு உதவுங்கள். குறிப்பாக, அவர்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள்.

ஆறாவது விஷயம்-

உங்களது தொழில் நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர் மீது கருணை காட்டுங்கள். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்படி விட்டு விடாதீர்கள்.

ஏழாவது விஷயம்-

நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகிய நாட்டின் கொரோனோ வீரர்கள் மீது அதிக மரியாதை செலுத்துங்கள்.

நண்பர்களே, மே மாதம் 3-ம் தேதி வரை, ஊரடங்கு விதிமுறைகளை அதிகபட்ச உண்மை உணர்வுடன் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே தங்கி இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

VayamRashtreJagrutyaa” என்ற முழக்கத்துடன் நாம் அனைவரும் நம் நாட்டை நித்திய விழிப்புணர்வு கொண்டதாக வைத்திருப்போம். இந்த சிந்தனையுடன் நான் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

உங்களுக்கு மிக்க நன்றி!

Exit mobile version