75 வது சுதந்திர தின கொண்டாட்டம் ஜவஹர்லால் நேரு படம் இல்லை! புகைப்படத்தை வெளியிட்ட இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில்

இந்தியாவின் 75 -வது சுதந்திர தினக் கொண்டாட்டம் நாடெங்கிலும் சிறப்பான முறையில் கொண்டாப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா, 75 இடங்களில் 75 வாரங்களுக்கு அம்ரித் மகோத்சவ் நடைபெறும் என்று பிரதமர் மோடி கூறினார்.

சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் முறையில் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின தொடர்பான படத்தில் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறாததற்கு காங்கிரஸ் கட்சி கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த புகைபடத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வீர் சவார்க்கர் மஹாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங், அம்பேத்கர், சர்தார் வல்லபபாய் படேல், ராஜேந்திர பிரசாத், மதன் மோகன் மாளவியா, ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.

முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர், கவுரவ் கோகோய் உள்ளிட்டோர் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பதிவிட்டு உள்ளனர்.

மேலும் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் நேரு படம் இல்லை இதை கவனிக்காத காங்கிரஸ் இப்போது பொங்குகிறது.

முக்கியமாக இதற்கு ராகுல் காந்தி சோனியா காந்தி ஆகியோர் இன்னமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version