கன்னியாகுமரி மாவட்ட பாஜகவின் ஏழுச்சி அதிமுகவினர் அதிர்ச்சி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் அபரித வளர்ச்சி மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியாக உள்ளது. குமரிமாவட்டத்தில் நடந்த குடியுரிமை ஆதரவு போராட்டம் மற்றும் சமீபத்தில் குமரி வந்த பாஜக மாநில தலைவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்ப்பு ஆகியவை  ஆளும் அதிமுகவிற்கும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் குமரியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் வருகையின் போது 144 தடை உத்தரவை மீறி ஊர்வலம் சென்றதாக 970 பா.ஜ.க வினர் மீது வழக்கு பதிவு. செய்யப்பட்டுள்ளது.

.குமரி மாவட்டத்திற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் வருகையின் போது அனுமதியின்றி ஊர்வலமாக சென்றதாக 970 பா.ஜ.க வினர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. குமரி மாவட்டம் முளகுமூட்டில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகனை குமரி மாவட்டம் வந்தார்.

அப்போது அவருக்கு மாவட்ட எல்லையான முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் முன்பு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து அங்கிருந்து நிர்வாகிகள்கூட்டம் நடைபெற்ற முளகுமூடு பகுதி வரை 144 தடை உத்தரவை மீறி ஊர்வலம் சென்றதாக பா.ஜ.க.வினர் 970 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது

முன்னாள் எம்பி வசந்தகுமார் மறைவிற்கு ஊர்வலம் சென்றவர்கள் மீது வழக்கு பதியாத காவல்துறை பாஜகவினர் மீது வழக்கு பதிந்துள்ளது குமரி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

Exit mobile version