காங்கிரசை சம்பவம் செய்த மூத்த நிர்வாகி குலாம் நபி ஆசாத் ! கட்சியில் சுதந்திரம் இல்லை….

காங்­கி­ரஸ் கட்­சி­யில் தலைமைக்கு எதி­ராக யாரும் பேச முடி­ய­வில்லை என்று அக்­கட்­சி­யின் மூத்த தலை­வ­ரான குலாம் நபி ஆசாத் தெரி­வித்­துள்­ளார்.

இந்­திரா காந்­தி­யும் ராஜீவ் காந்தி­யும் கட்­சிக்குத் தலை­மை­யேற்று இருந்­த­போது ஏதே­னும் தவறு நடந்­தால் அது­கு­றித்து கேள்வி எழுப்ப தமக்கு சுதந்­தி­ரம் வழங்­கப்­பட்டு இருந்­த­தாக அவர் கூறி­யுள்­ளார்.காங்­கி­ரஸ் கட்­சிக்கு முழு­நே­ரத் தலை­வர் தேவை என 23 மூத்த தலை­வர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்றனர். அவர்­களில் குலாம் நபி ஆசாத் முக்­கி­ய­மா­ன­வர்.

அவ­ரது மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் பத­விக்­கா­லம் முடி­வ­டைந்த பிறகு காங்­கி­ரஸ் தலைமை அவ­ருக்கு மீண்­டும் வாய்ப்பு வழங்­க­வில்லை. மேலும், கட்­சி­யின் நிர்வாகக் குழு­வில் இருந்­தும் அண்மை­யில் நீக்­கப்­பட்­டார்.ஆனால் இது­கு­றித்து குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்­பா­மல், காஷ்­மீர் முழு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்டு பேர­ணி­கள், பிர­சாரக் கூட்­டங்­களில் பங்­கேற்று வரு­கி­றார். இதை­ய­டுத்து அவர் புதுக்­கட்சி தொடங்க இருப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யா­னது.

காங்­கி­ரஸ் கட்­சித் தலை­மை­யு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக பஞ்­சாப் மாநில முதல்­வ­ராக இருந்த அம­ரீந்­தர் சிங், அண்­மை­யில் கட்­சி­யில் இருந்து வில­கி­னார்.இதை­ய­டுத்து புதிய கட்சி தொடங்­கிய அவர், அடுத்த தேர்தலில் பாஜ­க­வு­டன் கூட்­டணி அமைப்­பது குறித்து ஆலோ­சித்து வரு­கி­றார். அவ­ரது வழியை குலாம் நபி ஆசாத்­தும் பின்­பற்­று­வார் எனக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால் இது தவ­றான தக­வல் என்று குறிப்­பிட்­டுள்ள குலாம் நபி ஆசாத், இப்­போ­தைக்கு தனிக்­கட்சி தொடங்­கும் எண்­ணம் இல்லை என்­றார். மேலும், எதிர்­கா­லத்­தில் என்ன வேண்­டு­மா­னா­லும் நடக்­க­லாம் என்­றும் தெரி­வித்­துள்­ளார். இத­னால் காங்­கி­ரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

Exit mobile version