மோடி திடீரென தமிழ் பேசுவதும் ராஜராஜ சோழன் முதல் பாரதி வரை பேசுவதும் யாரால் என்று நினைக்கின்றீர்கள்?

அரசியல் தூது என்பது ஒரு கலை, வெளியுறவு அரசியல் என்பதை நிர்ணயிப்பதே அதுதான் . தூது என்றால் அண்டை நாட்டுக்கு சென்று விருந்து உண்டுவிட்டு படம் எடுத்து வருவது அல்ல‌

அங்கு தன் சொந்த நாட்டு நலனை பாதுகாத்து எதிரிக்கு அவர்கள் பலவீனம் மற்றும் எதிரி நாடுகளின் நிலைப்பாடு இன்னும் பலவற்றை சொல்லி அவர்களை ஒருமாதிரி சிந்திக்க வைத்து வழிக்கு கொண்டுவருவது அல்லது நாடகமாடி அவர்கள் வலுவினை குலைத்துவிடுவது குழப்பிவிடுவது என்பது ஒரு கலை

இதற்கு எக்காலமும் மிகபெரும் சான்று கண்ணன் பாரதத்தில் சென்ற தூது, ஆம் தூது செல்கின்றேன் என சென்று விதுரரை களத்தில் இருந்து அகற்றி பீஷ்மரையும் கர்ணனையும் மோதவிட்டு அஸ்வத்தாமனை துரியனால் ஒதுங்க வைத்து மிகபெரிய விஷயத்தை செய்து வந்தான் கண்ணன், கவுரவரின் தோல்வி அதில்தான் தொடங்கிற்று

அனுமன் ராமாயணத்தில் சென்ற தூதும் அப்படியே, ராமனை வளைத்து வாலியினை ஒழித்தது, லங்காபுரியில் அனுமன் செய்த சாதனை விபீஷ்ணனை அழகாக கழற்றி வந்து ராமனிடம் சேர்த்து ராவணனின் பல ரகசியங்களை வாங்கி கொண்டது.

கந்தபுராணத்தில் வீரபாகு சென்ற தூதும் சுவாரஸ்யமானது.

அதியமான் காலத்திலும் மூவேந்தர் காலத்திலும் ஓளவை அதை அழகாக செய்தார்

நம் காலத்தில் பாரத நாட்டுக்கு ஒரு அற்புத தூதர் கிடைத்திருக்கின்றார், அதுவும் தமிழனாக கிடைத்திருகின்றார், உலகம் உற்று கவனிக்கும் மாபெரும் ராஜதந்திரி அவர்

சீன யுத்தம் அவராலே இப்பொழுது தடுக்கபட்டது, கொதித்தெழுந்த சீனாவினை தன் ராஜதந்திரங்களால் கட்டி போட்ட மாபெரும் வித்தைக்காரர் அவர்

பாகிஸ்தானை சக இஸ்லாமிய நாடுகளில் இருந்தே பிரித்து அந்நாடுகளை இந்தியாவுடன் நெருங்க செய்தவர் அவர்

சீனா வாலாட்டினால் தைவான் ஹாங்காங்க் வியட்நாம் என ஜாடை காட்டுவது, துருக்கி வாலாட்டினால் கிரிஸுடன் கைகுலுக்குவது என அவரின் சாதனைகள் ஏராளம்

அவர் ஓய்ந்து ஒருநாள் கூட பார்த்ததில்லை இந்திய நலனுக்காய் ஒவ்வொரு நாடாக ஓடி கொண்டே இருக்கின்றார்

ரஷ்யாவுடன் பேச்சு என்றால் வரும் வழியில் ஈரானில் ஒரு சந்திப்பு அத்தோடு துபாயில் சில நடவடிக்கை என செல்லும் இடமெல்லாம் ராஜதந்திரம்

செஷல்ஸ் தீவோ ஜப்பானின் டோக்கியொவோ எங்கெல்லாம் இந்தியா நிற்க வேண்டுமோ அங்கெல்லாம் ஓடி ஓடி வழி செய்யும் உழைப்பு

டிரம்பருக்கு அடுத்து வரும் பிடன் என்ன செய்வார் என எதிர்பார்த்து இபபொழுதே பல நடவடிக்கைகளை எடுக்கும் அந்த சாதுர்யம் என அம்மனிதனின் தேசசேவை பெரிது.

ஆம், இன்றைய உலகின் மிகபெரும் ராஜதந்திரி என மதிக்கபடும் அந்த தமிழன், இந்திய வெளியு‌றவுதுறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் என்பவரே அந்த பெருமகன்

இந்திய பாதுகாப்பு துறைகளில் ராணுவம் உளவுக்கு அடுத்து மாபெரும் சவாலான விஷயம் வெளிநாட்டு தூதரக பணியும் அதை முறையாக ராஜதந்திரமாக கையாள்வது

காரணம் ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டு தூதரகத்தையும் தூதரையும் அவ்வளவு கவனிக்கும், இவர் என்ன செய்கின்றார்? யாரை சந்திக்கின்றார்? என்ன பேசுகின்றார்? தம் நாட்டுக்கு எதிராக ஏதும் செய்கின்றாரா? என சந்தேகத்தோடே நோக்கும்

அவர் தன் நாட்டுக்கு எதிரி என அறியபட்டால் உடனே வெளிதள்ளும் சில முரட்டு நாடுகள் உடனே கொன்றுவிடும், கொமேனி அதை செய்தார், இன்னும் பல நாடுகளில் அமெரிக்க தூதர்களே அப்படி கொல்லபட்டனர்

எதிரி நாடுகள் என அறியபட்டாலும் அவற்றை சமாதானபடுத்தி தன் நாட்டு நலத்தை பேணி காப்பது ஒருவகையான ராஜதந்திரம். இந்த பரந்த உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு, தன் சுயநலமும் உண்டு, எதிரியும் உண்டு

ஒரு பக்கம் நெருப்பு, ஒரு பக்கம் பனி ஒரு பக்கம் பள்ளம் ஒரு பக்கம் நாகம் என சுற்றும் உலகில் தேச நலன் எனும் எண்ணெய் கலயத்தை மெல்லிய கம்பியில் நடந்து மிக கவனமாக கொண்டு செல்ல வேண்டியது அப்பணி

கடும் ஆபத்திலும் சிக்கலிலும் சுயநலம் தேடும் உலகிலும் பிராந்திய நலம், கண்டத்தின் நலம் இன்னும் பலவகையான நலன் என இழுத்துவிட்டு அவைகளின் நம்பிக்கையினை பெற்று அதே நேரம் எதிர்தரப்பினையும் பகைக்காமல் லாவகமாக நடந்து தன் நாட்டின் நலனை காப்பது பெரும் திறமை, அப்படி ஒரு ராஜதந்திரி கிடைப்பது வரம்

இந்தியாவுக்கு கண்ணனின் அவதாரமாக கிடைத்திருக்கின்றார் அந்த ஜெய்சங்கர்

இந்தியாவில் யாருக்கும் இல்லாத பெரும் வரலாறு அந்த தமிழனுக்கு உண்டு , அவரின் சாதனை பக்கங்கள் நீண்டு கொண்டே போகும் அளவு பெரியவை, கொஞ்சம் சில பக்கங்களை மட்டும் காணலாம்.

இன்று 66 வயதை எட்டும் அவரின் வெளியுறவு துறை பணி அவருக்கு 22 வயதான பொழுது 1977ல் தொடங்குகின்றது, முதல் பணியாக இரு வருடங்கள் மாஸ்கோவில் அன்றைய சோவியத் யூனியனில் இருந்தார். அது இந்திய சோவியத் உறவு உச்சத்தில் இருந்த காலம், உலக அரசியலை அந்த சிகப்பு பூமியில்தான் கற்க தொடங்கினார் கூடவே நிறைய கற்றார் ஜெய்சங்கர்.

அவர் அதன் பின் ஜி.பார்த்தசாரதியின் கீழ் பணியாற்ற சொன்னது இந்திய அரசு, ஆம் அந்த பார்த்தசாரதி அமெரிக்காவுக்கான ராஜதந்திரியாக இருந்தார், அவரின் கீழ் அமெரிக்காவுகான இந்திய தூதரகத்தில் பணியாற்றினார் ஜெய்சங்கர்

(இரு ஜி.பார்த்தசாரதிகள் இந்தியாவில் பிரசித்தி, ஒருவர் இந்த ஜி.பார்த்தசாரதி இவர் அமெரிக்க விஷயங்களை கையாண்ட ராஜதந்திரி. இவர் இன்று இல்லை

இன்னொரு ஜி.பார்த்தசாரதி ராணுவத்தில் இருந்தார், பின் தெற்காசிய ராஜதந்திரியானார், இலங்கை விவகாரத்தை கையாளும் பொறுப்பை இந்திரா அவருக்கே வழங்கினார், இவர் காலத்தில்தான் போராளிகளுக்கு பயிற்சி கொடுக்கபட்டது, அந்த பார்த்தசாரதி காங்கிரஸ் காலத்தில் டம்மியாக்கபட்டார், இன்று மோடி இலங்கை விவகாரங்களுக்கு அவரையே அமர்த்தியிருக்கின்றார், இந்தியா இலங்கையில் அசத்துகின்றது

இந்த இரு பார்த்தசாரதிகளுமே தமிழர்கள்)

அமெரிக்காவில் 1985களில் ஜெய்சங்கர் இருந்தபொழுது செய்த மிகபெரும் சாதனை தாராப்பூர் அணுவுலை சிக்கலை தீர்த்தது. அன்று இந்தியா அணுகுண்டு செய்திருந்ததால் இன்றைய ஈரானுக்குள்ள நெருக்கடிகளை அமெரிக்கா கொடுத்தது அதை ராஜதந்திரமாக சமாளித்து அந்த ஆலை மீண்டும் இயங்க முழு உழைப்பை கொடுத்தார் ஜெய்சங்கர்

அமெரிக்காவில் இருந்து மீட்கபட்டு இலங்கைக்கு அனுப்பபட்டார், அங்கு இன்னொரு ஜி.பார்த்தசாரதி பார்த்தோம் அல்லவா அவரோடு இணைந்துதான் இலங்கையின் 1987 காலங்களை எதிர்கொண்டார், அன்று அவர் கீழ்நிலை அதிகாரி

ஜெய்சங்கர் காலத்தில்தான் இந்திய அமைதிபடை உள்ளே சென்றது, ஜெய்சங்கரும் பார்த்தசாரதியும் நல்ல முயற்சி எடுத்தார்கள் ஆனால் இந்திய தூதரான பெயர் ஜே.என் தீட்சித் என்பவர் ராஜிவின் அனுபவமின்மையால் அவரை ஆட்டிவைத்தார்

ராஜிவின் சாவுக்கு தீட்சித் என்பவர்தான் முதல் காரணம் , மிக சிறிய குழு என புலிகளை அவர் நடத்தியதுதான் ஈழ அழிவு

ஆனாலும் புலிகளின் அடாவடியினை நேரில் பார்த்தவர் ஜெய்சங்கர்

அதன் பின் டெல்லியில் பணிவழங்கபட்டது, 1996ல் ஜப்பானிய துணை தூதுவராக டோக்கியோவுக்கு அனுப்பபட்டார், ஜெய்சங்கரின் மனைவியும் ஜப்பானிய பெண்மணியே

1998ல் இந்தியா அணுகுண்டு சோதனையினை செய்ய, அணு ஆயுததுக்கு எதிரான ஜப்பான் பொங்கி எழ அதை சமாளித்து ஜப்பானிய உறவை மேம்படுத்தியதி ஜெய்சங்கரின் பங்களிப்பு மறக்க முடியாதது

அதன் பின் செக்நாட்டு தூதரனார் , செக்நாடு சிறியது என்றாலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஐரோப்பிய நாடு என்பதால் இந்தியாவுக்கான காரியங்களை சிறப்பாக செய்தார்

2004ல் அமெரிக்க தூதரனார் அந்த காலகட்டம் இந்தியா அணுஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா அடம்பிடித்த காலம் மிக கடுமையாக மிரட்டிய காலம், அதில் இந்திய நலன்களை காத்து, அமெரிக்க பொருளாதார தடையில் இருந்து மீட்டவர் அவர்தான்

2004ல் இந்தியாவினை சுனாமி தாக்கியபொழுது உலகெல்லாம் இருந்து மீட்புகுழு வரவும் ஜெய்சங்கர் முக்கிய காரணம் அவரின் தொடர்பு அப்படி இருந்தது

ஒரு கட்டத்தில் வெளியுறவு துறையின் பெரும் அதிகாரியனார், காங்கிரஸ் அரசு அவரை அதிகாரியாகவே வைத்து சிங்கப்பூரின் தூதராக அனுப்பியது, அங்கு ஓசைபடாமல் ஒரு காரியம் செய்தார், ஆம் சிங்கப்பூரில் இந்தியாவுக்கான அவசரகால ராணுவ விஷயம் சில உண்டு

அட்டகாசமாக அதை சாதித்தார் ஜெய்சங்கர் அதன் பின் சீனாவுக்கான தூதரனார்

அது சிக்கலான காலகட்டம் சீனா ஒருமாதிரி அடம்பிடித்து கைலாச யாத்திரைக்கு விடமாட்டோம், அருணாசல பிரதேசம் தெற்கு திபெத் என அடம்பிடித்த காலத்தில் சீன தூதராக இருந்தும் திபெத்துக்குள் வந்தார் ஜெய்சங்கர், அவரின் ராஜதந்திர அணுகுமுறையால் கைலாச யாத்திரை திறக்கபட்டது

திபெத்தில் கால் வைத்த அல்லது வைக்க அனுமதிக்கபட்ட முதல் இந்திய தூதர் அவர்தான்

சீனா பொதுவாக யாரையும் நம்பாது, அந்த சீனாவினையே இந்தியா சீனாவுக்கு எதிரி அல்ல என அன்று ஓரளவு தெளிவினை கொடுத்தவர் ஜெய்சங்கர், அவரின் சாதனை அது

அதன்பின் மறுபடி அமெரிக்க தூதரனார், அப்பொழுது பல ராஜதந்திர சர்ச்சைகளும் தேவயாணி கோப்ரகடே என்ற அதிகாரி சிக்கி கொண்ட விஷயமும் நடந்தது அதை எல்லாம் சமாளித்தது ஜெய்சங்கரே

நிச்சயம் நீண்ட அனுபவம் கொண்டவர் ஜெய்சங்கர், உலகில் அவர் கால் படா நாடு இல்லை, அவரை அறியாத வெளிநாட்டு துறைகள் இல்லை. எல்லா இடத்திலும் அவருக்கு நற்பெயரே

இதைத்தான் மோடி குறித்துகொண்டார்

ஹிட்லரை போன்றவர் மோடி என்பார் சிலர், ஹிட்லரின் முதல்பாதி வாழ்க்கை ஏற்றுகொள்ள கூடியதே. அந்த ஹிட்லரிடம் இருந்த சிறப்பான குணங்களில் ஒன்று எவன் மகா திறமைசாலியோ எவனால் குறிப்பிட்ட காரியத்தை திறம்பட நடத்தமுடியுமோ அவனிடம் பொறுப்பை ஒப்படைப்பது

அவன் கண்டெடுத்த ஒவ்வொருவரும் ரத்தினங்கள் விஞ்ஞானி உட்பட, அமைச்சர்கள் தளபதிகள் உட்பட, அவனின் வெற்றிக்கு அதுதான் காரணம்

மோடி தன் இரண்டாம் ஆட்சியில் பெரும் திட்டங்களை வைத்திருந்தார், அவை உலகை உலுக்கபோகும் விஷயம் எனவும், தேர்ந்த ராஜதந்திரியின்றி அவை சாத்தியமில்லை என்பதையும் நன்றாக உணர்ந்தபொழுது அவர் கண்முன் வந்தவர்தான் ஜெய்சங்கர்

கொஞ்சமும் யோசிக்காமல் அவரிடம் வெளியுறவு துறை அமைச்சர் பதவியினை கொடுத்தார் மோடி

அதன் தாக்கம் காஷ்மீர் விவகாரத்தில் 370 ரத்து செய்யபடும் பொழுது தெரிந்தது, தன் தேர்ந்த அனுபவத்தாலும் தன் அகில உலக தொடர்பாலும் உலகில் ஒரு குரல் ஒலிக்காமல் பார்த்துகொண்டார்

அரபு நாடுகளையே அசால்ட்டாக கட்டிபோட்டார் ஜெய்சங்கர்

பாகிஸ்தானை அடுத்து முணுமுணுத்த நாடு சீனா, அவ்வளவுதான் ஜின்பெங்கை மாமல்லபுரத்துக்கு இழுத்து வந்து அசத்தினார் ஜெய்சங்கர்

அதன்பின் துருக்கி முணுமுணுத்தது அதுவும் ஓரிருநாளில் அமைதியாயிற்று.

இதெல்லாம் மாபெரும் சாதனைகள், ஒரு வரியில் விளக்கமுடியாதவை

ஆம் பொதுவாக இருநாட்டு தலைவர்கள் சந்திக்கும்பொழுது சம்பிரதாயமே இருக்கும் அதற்கு முன் திரைமறைவில் இருநாட்டு ராஜதந்திரிகளும் பேசி பல ஒப்பந்தம் முடிவு எல்லாம் எட்டபட்டே காட்சிகள் நடக்கும், அவர்கள் காட்சிக்கு வரமாட்டார்கள் தலைவர்கள்தான் வருவார்கள்

பின்னணி இயக்கம் எல்லாம் வெளியுறவு துறையே

ஒவ்வொரு நாட்டின் வெளியுறவு துறையும் கவனிக்கதக்கது, உலகில் அந்நாட்டு முகமாக அறியபடுபவை, அமெரிக்காவில் அதிபரை அடுத்து சக்தி மிக்கவர் வெளியுறவு துறை அமைச்சர், இன்னும் பல நாடுகளில் அப்படியே

இந்தியாவுக்கு அந்த தேர்ந்த அமைச்சரை மோடி நியமித்தது மிக பெரும் நல்ல விஷயம், மோடிக்கு ஏன் சில இடங்களில் கைதட்டுகின்றோம் என்றால் இதற்காகத்தான்

கிட்டதட்ட 22 வயதில் இருந்து 43 வருடமாக இந்தியாவுக்கு உழைத்து வருபவர் ஜெய்சங்கர், அவர் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் சீனாவிலும் எடுத்த பயிற்சியே இன்று காஷ்மீர் சிக்கலை உலக தலையீடு இன்றி தீர்க்க முடிந்தது

இன்றும் சீனா இந்தியாவோடு இனி உரசல் இல்லை என சொல்லிவிட்டது, அமெரிக்கா இந்தியாவினை தேடுகின்றது, ஈரான் தேடுகின்றது, ஜெர்மன் தேடுகின்றது இன்னும் ஏகபட்ட நாடுகள் நட்புறவில் இருக்கின்றன என்றால் காரணம் ஜெய்சங்கர்

இலங்கையில் இந்தியா இன்று கால்பதிகின்றது என்றால் அன்று பார்த்தசாரதி எனும் தமிழனிடம் தமிழன் ஜெய்சங்கர் பெற்ற அனுபவமும் மகா முக்கிய காரணம்

மோடி ஊர்சுற்றுவார் என சொல்பவன் சொல்லிகொண்டுதான் இருப்பான், அவரின் ஒவ்வொரு பயணத்தின்பொழுதும் ஒரு நாட்டு நலன் இருக்கும் அதை ஜெய்சங்கர் திட்டமிட்டு வைப்பார் மோடி சென்று கையெழுத்திடுவார்

அந்த அளவு உலக அரங்கில் தனி இடம் பெற்றிருக்கின்றார் ஜெய்சங்கர் எனும் தமிழர்

“கனகவிசயரின் முடிதனை எரித்து கல்லினை வைத்தான் சேரமகன், இமயவரம்பினில் மீன்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே” என்ற வரிக்கு ஏற்ப காஷ்மீரை இந்தியாவோடு முழுக்க சேர்த்த தமிழன் அவர்

ஆம் அவர் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் காஷ்மீர் விவகாரம் உலக விஷயமாகி இந்திய மானம் சந்தி சிரித்து காட்சிகளே மாறியிருக்கும்

பண்டைய சேர, பாண்டிய மன்னன் வரிசையில் அந்த இமயமலையினை மீட்டெடுத்தவர் ஜெய்சங்கர்

இந்த தமிழரை பற்றி இங்கு யாராவது பேசுவார்களா?, இந்த மாபெரும் ராஜதந்திர் தமிழன், உலகில் இந்தியாவுக்கு தனி இடம் பெற்றுகொடுத்திருக்கும் தமிழன் பற்றி தமிழக ஊடகமோ டிவியோ பேசுமா என்றால் பேசாது

நடிகர் ஜெய்சங்கர் தெரிந்த அளவு இந்த மாபெரும் சாதனையாளர் தமிழர் தேசிய ஜெய்சங்கர் தமிழனுக்கு தெரியாது

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரைவேக்காடு அரசியல்வாதிகளும் அவர்களின் அறிவே இல்லா அடிப்பொடிகள் மட்டுமே, தமிழகத்தின் சாபக்கேடு அப்படி

10க்கும் மேற்பட்ட மொழிகளை சரளமாக பேசுவார் ஜெய்சங்கர், ஆங்கிலம் மாண்டரின் ஜப்பானிய மொழி , ரஷ்ய மொழி என எல்லாமே அவருக்கு சரளம், இந்தியும் உண்டு

பன்மொழி படித்தாலே ஒரு தமிழன் உருப்படுவான் என்பதற்கு மிகபெரும் அடையாளம் அவர்.

நாம் அந்த அற்புத தமிழனை எப்பொழுதும் நன்றியோடு நினைப்போம், தகுதியான தமிழனுக்கு பொருத்தமான பொறுப்பை கொடுத்த மோடியினையும் நினைப்போம்

இன்று அந்த மாபெரும் ராஜதந்திரி சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு ஜனவரி 9ம் நாள் பிறந்த நாள்

சுப்பிரமணி என்பது தமிழ்கடவுளின் பெயர், தமிழர்களின் அடையாளம்

ஆம் அந்த சுப்பிரமணிய ஜெயசங்கரும் தமிழக அடையாளம்

இந்த ஜெய்சங்கரும் டெல்லி நேரு பல்கலைகழகத்தில்தான் படித்தார், ஆனால் நாட்டுக்கு எப்படி நல்ல பொறுப்பான ராஜதந்திரியாக உருவாகிவிட்டார் பார்த்தீர்களா?

அந்த பெருமைமிக்க நிறுவணத்தின் இன்றைய நிலை என்ன? இன்று தேசவிரோதிகளால் நிறைந்து குட்டிசுவராயிற்று

இன்று ஜெய்சங்கரின் பிறந்த நாள், 66ம் பிறந்த நாள்

நாம் முன்பே குறிப்பிட்டபடி ராணுவ தளபதி போல வெளியுறவு துறை பணியும் சவால்மிக்கது பொறுப்பும் உயிர் ஆபத்தும் மிக்கது

அந்த வரிசையில் இந்த தமிழனும் மாபெரும் சவால் எடுத்து தேசம் காக்கின்றார்

ரஷ்யாவினையும் அமெரிக்காவினையும் பதமாக கையாண்டு, இஸ்ரேலையும் அரபு நாடுகளையும் ஒருசேர கையாண்டு, சீனாவினையும் ஜப்பானையும் ஒருசேர கையாண்டு, ஐரோப்பாவினையும் லத்தீன் அமெரிக்காவினையும் ஒருசேர கொண்டுவந்து, ஆப்ரிக்க நாடுகள் முழுக்க இந்திய சார்பு எடுக்க வைத்து..

நினைத்தாலே மயக்கம் போட வைக்கும் விஷயம் இது, இவ்வளவையும் செய்துதான் ஐ.நாவில் காஷ்மீர் இந்தியாவின் பகுதி என நிரூபித்திருக்கின்றார் ஜெய்சங்கர்

எவ்வளவு பெரும் ராஜதந்திரம் இது, பெரும் வீரமும் கூட.

அந்த நகர்வுதான் அயோத்தி தீர்ப்பு உலக சலசலப்பு ஆகாமலும் பார்த்து கொண்டது, அது ஜெயசங்கர் தவிர யாருக்கும் சாத்தியமில்லை

“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்” என்றார் கண்ணதாசன்

அப்படி நாட்டின் மானம் காத்து நிற்கும் ஜெய்சங்கர் சரித்திரமாகிவிட்டார், அவர் ஆயிரம் பிறை காண இந்நாட்டின் எல்லா தெய்வங்களும் அருள்புரியட்டும் எல்லா ஆலயத்திலும் அவருக்காய் பிரார்த்தனை நடக்கட்டும்

சீனாவினை சமாளித்து, அதனால் அமெரிக்காவுடன் நெருங்கி அந்த கோபத்தில் எழும்பிய ரஷ்யாவினை கட்டம் கட்டி ஜெய்சங்கரின் சாகசம் தொடர்ந்த நிலையில் இனி ஜோ பிடனின் இந்திய அணுகுமுறையில் இருந்து இந்தியாவினை காக்க களம் காண்கின்றார் ஜெய்சங்கர்

ஜோ பிடனும் கமலா ஹாரிசும் அடாவடி வகையறா, அப்பட்டமான இந்திய வெறுப்பும் பாகிஸ்தான் ஆதரவு மனப்பான்மையும் கொண்டவர்கள், அவர்களை சமாளித்து தேசத்தை வழிநடத்தும் மிகபெரிய பணி ஜெய்சங்கர் மேல் சுமத்தபட்டிருகின்றது

ஆனால் மிக எளிதாக அதை அவர் செய்வார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை அவரின் மிகபெரிய அனுபவம் தேசத்துக்கு நன்மை கொண்டுவரும்

நாட்டுக்காய் ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் அந்த ராஜதந்திரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழிய நீ எம்மான், வாழிய வாழியவே

அவர் ஒரு புத்தகமும் எழுதியிருக்கின்றார் அதன் பெயர் “The India Way”

ஆம் இந்தியாவுக்கு உலகளவில் வழிகாட்டும் அந்த தேசபக்தனின் அறிவான புத்தகம் அது, படித்தால் உலக அரசியல் நிலைபற்றி மாபெரும் தெளிவும் அறிவும் கிடைக்கும். ஆக சிறந்த களஞ்சியம் அது.

(மோடி திடீரென தமிழ் பேசுவதும் ராஜராஜ சோழன் முதல் திருகுறள், பாரதி வரை பேசுவதும் யாரால் என்று நினைக்கின்றீர்கள்?

கவனியுங்கள் நிர்மலாவும் ஜெய்சங்கரும் மத்திய அமைச்சரவைக்கு வந்தபின்பே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது

இந்த தமிழர்கள் அந்த நல்லவிஷயத்தை செய்து தமிழை அகில உலகுக்கு எடுத்து சென்று கொண்டிருக்கின்றார்கள்

நல்ல தமிழர்களின் திறன் அறிந்து, அவகளின் நாட்டுபற்றின் உண்மைதன்மை அறிந்து அவர்களுக்கு மிகபெரிய கவுரவம் கொடுத்திருக்கின்றார் மோடி, அதில்தான் சீனமிரட்டல், உலகளாவிய குழப்பகாலம், கொரொனா காலத்திலும் தேசம் தலைநிமிர்ந்து நிற்கின்றது)

Exit mobile version