NPR எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கேள்விப்பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மூலம் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பில் 34 கேள்விகள் இடம் பெற உள்ளது.
அதில் 31கேள்வியின் விவரத்தை மத்திய பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

¤ வீட்டு எண்
¤ மக்கட்தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண்
¤ வீட்டின் தரை-சுவர் மற்றும் கூரைக்கு பயன்படுத்திய கட்டுமானப்பொருட்கள்.


¤ கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு
¤ வீட்டின் தற்போதைய நிலவரம்
¤ வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
¤ தற்போது வீட்டில் வசிப்பவர்கள்களின் எண்ணிக்கை
¤ குடும்பத் தலைவரின் பெயர்
¤ குடும்பத் தலைவரின் பாலினம்
¤ குடும்பத் தலைவர் எந்த வகுப்பைச் சார்ந்தவர்(SC/ST/BC/MBC)


¤ வீட்டின் உரிமையாளர் விவரம்
¤ வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை
¤ வீட்டில் வசிக்கும் திருமணமானவர்களின் எண்ணிக்கை
¤ குடிநீர் கிடைக்கும் வழிகள்
¤ விளக்கு வசதி கிடைக்கும் விவரம்
¤ கழிப்பறை உள்ளதா
¤ எந்த வகை கழிப்பறை
¤ மற்ற வகை குடிநீர் வசதி தேவைப்படுகிறதா?


¤ குளியலறை வசதி உள்ளதா?
¤ எரிவாயு இணைப்பு உள்ளதா?
¤ சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள்?
¤ வானொலி உள்ளதா?
¤ தொலைக்காட்சி உள்ளதா?
¤ இணையதள வசதி உள்ளதா?
¤ மடிக்கணிணி மற்றும் கணிணி உள்ளதா?


¤ தொலைபேசி-அலைபேசி உள்ளதா?
¤ இரு சக்கர வாகனம் உள்ளதா?
¤ கார்-வேன்-ஜீப் போன்ற வாகனம் உள்ளதா?
¤ வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம்
¤ உங்கள் அலைபேசி எண்!!

CAA NPR கேள்விகள்

Exit mobile version