நாட்டுக்கும், பா.ஜ.கவிற்கும் உயரிய தலைவர் பிரதமர் மோடி! சிவசேனா புகழாரம்! மஹாராஷ்டிராவில் ஆட்சி மாறுகிறதா?

பா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடியின் தலைமையத்துவமே காரணம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் சிவசேனாவின் முக்கியத் தலைவருமான சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார். இன்று பிரதமர் மோடியை பல கட்சித்தலைவர்கள் கடுமையாக விமர்சிப்பதற்கு காரணம் அவர் அசைக்கமுடியாத அளவில் உறுதியான தலைவராக இருப்பதுதான்.

மஹாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். அவர் பிரதமரிடம் மராத்தா இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிரச்னையை பற்றி அவர்கள் விவாதித்ததாக தகவல் வெளிவந்தது. ஆனால் கடந்த வாரம் பா.ஜ.க வை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சரத்பவாரை திடீரென சந்தித்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை உத்தவ் தக்கரே சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதனால் மஹாராஷ்டிராவில் அரசியல் மாற்றம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது என அரசியல் வட்டரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த சந்திப்பின் மூலம் சிவசேனா மீண்டும் பா.ஜ.க உடன் நெருக்கமாகிறதா என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், “நாங்கள் அரசியல் ரீதியாக வேண்டுமானால் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக எங்கள் உறவு முறிந்துவிட்டதாக அர்த்தமில்லை.” என கூறினார்.

மேலும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம், வாக்களர்களிடம் பிரதமருக்கு உள்ள செல்வாக்கு, மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களை முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ்., விரும்புவது போன்ற ஊகங்கள் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அது பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை. ஊடக செய்திகளை நான் கண்டுகொள்வதில்லை. கடந்த 7 ஆண்டுகளில் பாஜக அதன் வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு கடமைப்பட்டிருக்கிறது. அவர் தான் நாட்டுக்கும், அக்கட்சிக்கும் உயரிய தலைவர்.” என கூறினார்.

சில ஊடகங்களில் பிரதமர் மோடியை பதவியில் இறக்க முயற்சி என்றெல்லாம் செய்திகள் போடுகின்றன. அவர் மீது பலவேறு தரப்பினரும் அதிருப்தியில் இருப்பது தெரிந்தாலும், வரிகட்டுபவர்களுக்கு கடந்த ஏழ ஆண்டுகளாக எந்த ஒரு பெரிய சலுகையும் கிடைத்ததாக தெரியவில்லை.

இவர் பதவி ஏற்ற பிறகு அவர் செய்த பணி ஏழைமக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது. இலவசமாக எல்லா மக்களுக்கு கழப்பிட வசதிகள் செய்து கொடுத்தது. ஏழை மக்களுக்கு இலவச வங்கிச்சேவை. கிராமங்களில் குடிநீர் வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு முத்ரா லோன் வசதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் அண்டைநாடுகளுடன் எந்த வித அச்சுறுத்தல் இல்லை அப்படியே இருந்தாலும் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படுகிறது. வெளிநாட்டு அமைப்புகளிடம் சட்டவிரோத செயல்களுக்கு வரும் பணம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

நமது நாடு இந்துக்கள் நிறைந்த நாடு அந்த மக்களுக்கு பாதுகாவலனாக பிரதமர் மோடி திகழ்கிறார். அதே சமயம் எந்த விதமான மத மோதல்கள் கடந்த பல வருடங்களாக இந்தியாவில் நடைபெறவில்லை. மதமாற்ற கும்பல்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பணம் முற்றிலும் தடைச் செய்யப்பட்டுள்ளது. இதுவெல்லாம் பெரிய சாதனையாகும்.

மோடி அவர்கள் இந்திராகாந்தி போன்றவர். அவர் பாஜகவில் இருந்தாலும் அவரே பிரதமர். வெளியே வந்து புதிய கட்சியைத் தொடங்கினாலும் ஏழைகளின் தலைவராக சித்தரிக்கப்படுவார். இந்திராதான் இந்தியா இந்தியாதான் இந்திரா என்பதைப் போல் பிரதமர் மோடிதான் இந்தியா என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம் ( எந்த கொம்பனாலும்) பிரதமர் மோடி அசைக்க முடியாது.

Exit mobile version