ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்காவை மிஞ்சிய பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான்.

இந்திய ராஜதந்திரம். பாகம் இரண்டு.ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் இந்திய நகர்வுகள் தற்போது உலக அளவில் சிலாகிக்கப்படுகிறது என்பதாக கடந்த பதிவில் பார்த்து இருந்தோம். இது ஏதோ ஒரே நாளில் நடந்த…. அல்லது நடந்து விட்ட சம்பவம் அல்ல.மாறாக இந்தியா கடந்த ஓராண்டாக.. அடி மேல் அடி எடுத்து சர்வ ஜாக்கிரதையாக கையாண்ட சமாச்சாரம் இவை என்பது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய தொடங்கி இருக்கிறது.சரியாக சொன்னால் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த காலத்தில் அவர் அறிவித்த முடிவினை ஒட்டி….. அதாவது ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புக்களை அங்கு இருந்து அகற்றுவது குறித்த முடிவினை ஒட்டி இந்திய அரசு நிர்வாகம் சில நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை அப்போதே உருவானது.இது அவர் ஏதோ தனிச்சையாக மேற்கொண்ட முடிவு அல்ல…

கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் ஒட்டி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று தான் இது. அவர் இதனை செயல் படுத்த நினைத்த….. அதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் வேறு விதமானது.தற்போதைய அதிபர் ஜோபைடன் நிர்வாகம் இதனை கையாண்ட விதம் வேறுவிதமானது. உலக அளவில் பரிகாசம் செய்யப்பட்ட இது, ஜோ பைடன் நிர்வாகத்துக்கு மாத்திரம் அல்ல ….

ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கே பெருத்த அவமானத்தை பெற்று தந்துள்ளது. ஆரம்பத்தில், வேண்டும் என்று தான் பைடன் நிர்வாகம் இதனை செய்தது என்கிறார்கள்…. இதன் மூலம் டொனால்ட் ட்ரம்பின் பாணியை.. அவரது நிர்வாக குழு பகடி செய்ய விரும்பினார்‌ அவர்.காரணம்அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின்னரான நிர்வாகத்தில் உள்ள பலரும் டொனால்ட் ட்ரம்ப் பாணியிலான ஆட்சி சரியே என்பதாக சாட்சி சொல்ல ஆரம்பித்து விட்டனர்…

அதாவது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாக முறை மற்றும் முடிவுகள் சரிதான் என்பது போலான தோற்றத்தை அவர்கள் அறியாமல் அங்கு அமெரிக்காவில் கட்டமைத்துவிட்டனர்.எதனை எல்லாம் தேர்தல் சமயத்தில் தவறு என்று விமர்சகர்கள் செய்து வாக்குகளாக பெற்று ஜோபைடன் அதிபர் தேர்தலில் ஜெயித்து இருந்தாரோ…. அவற்றை எல்லாம் அவரது தற்போதைய நிர்வாக குழுவில் இருந்தவர்கள், சரி என்று சொல்வது போன்ற தோற்றத்தை அது அங்கு உண்டு பண்ணி விட்டது.அதனை உடைக்க விரும்பினார்.தவிர ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் எதனையும் பெரியதாக அவரால் செய்து காண்பித்து விட முடியவில்லை என்கிற நிர்வாக சிக்கல் வேறு அவருக்கு அங்கு எழுந்தது…

போதாக்குறைக்கு உளவு துறையினரின் கபடி ஆட்டத்தில் சவுதி அரேபியாவில் வைத்து வேறு சில ரஸா பாசமான சம்பவங்கள் எல்லாம் நடந்து விட்டன…. ஆதலால் அவற்றை எல்லாம் சரிக்கட்ட அமெரிக்க படைகளை வாபஸ் என்று அதிரடியாக அறிவித்து அதிர்ச்சி அளிப்பதாக நினைத்து கொண்டார் அவர்.ஆனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் ஆஃப்கானிஸ்தானில் நிலை கொண்டு இருந்த அமெரிக்க படைகள் தான். அவர்கள் மாத்திரம் அல்ல மற்ற நாடுகளின் கூட்டு ராணுவ படைகளை சேர்ந்த வீரர்களும் தான்.

கால அவகாசம் மற்றும் முன்னேற்பாடுகள் சற்றும் கொடுக்காமல் அவசர அவசரமாக துரித கதியில் வெளியேற்றம் என்பது போலான தோற்றத்தை அது அங்கு உண்டு பண்ணி விட்டது.படுபயங்கரமான விளைவுகளை அது அங்கு ஏற்படுத்தி விட்டது.நிர்வாக சிக்கல் ஒரு புறம் இருக்க….. அமெரிக்க ராணுவ தளங்கள் அப்படியே கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன் மதிப்பு மாத்திரமே சில பல ஆயிரம் கோடி டாலர்களை தாண்டியது.

நம் ரூபாய் மதிப்பில் சற்றேறக்குறைய 23 ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள். இதனை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் நிஜ கணக்கு என்பது போலான வாதம் உலா வந்து கொண்டு இருக்கிறது.ஜோபைடன் நிர்வாகமோ ஆஃப்கன் பணம் அமெரிக்க வங்கிகளில் வைப்பு நிதியாக இருப்பதை சுட்டிக் காட்டி அவற்றை முடக்கி விட்டதாக சொல்லி மீண்டும் சேற்றை வாரி பூசிக்கொண்டது. உலக நாடுகள் அமெரிக்காவினை அருவெறுப்பாக பார்ப்பதை உணர்ந்த பைடன் அது தன் ராஜதந்திர நகர்வு என்று சொல்லி சமாளிக்க பார்த்தார். அவரது ராணுவத்தினரே காறி உமிழாத குறை தான் அங்கு அவருக்கு நேர்ந்தது.

சரி இவற்றில் இந்தியா என்ன மாதிரியான நகர்வினை கொண்டு இருந்தது….. அல்லது இயங்கியது.பைடன் நிர்வாகத்தின் அறிவிப்பு வெளிவந்ததும் முதல் காரியமாக இந்திய பிரஜைகளை மற்றும் முக்கியஸ்தர்களை துரித கதியில் வெற்றிகரமாக வெளியேற்றியது.ஆஃப்கானிஸ்தானில் அது தன்னளவில் பெரும் முதலீடு செய்த நாடுகளில் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. அப்படி ஒரு சூழ்நிலையில் இந்தியா இப்படி பதைபதைக்க வெளியேறிய நிகழ்வினை பார்த்து விட்டு பயந்து ஓடுவதாக பாகிஸ்தான் உட்பட இங்குள்ளவர்களே பகடி செய்தனர்….

ஆனால் பின்னாளில் அங்கு நடக்கும் சம்பவங்கள் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.ஏன் இத்தனை அவசரம் காட்டியது இந்தியா என்பதே பின்னர் தான் புரிந்தது பலருக்கும்…..அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் பலரை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு பேரம் பேசினார்கள் தாலிபான்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். பல லட்ச கணக்கான டாலர்கள் கை மாறியது. யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.இந்த பணம் அனைத்துமே தீவிரவாதிகளின் கைகளுக்கு தான் சென்று இருக்கும். அவர்களில் பலர் தாலிபான்களா என்பதே சந்தேகம் தான் என்கிறார்கள்.ஏன் இப்படி?

ஏனெனில் தாலிபான்கள் ஒரு குடையின் கீழ் இயங்கும் தீவிரவாத குழு அல்ல.அது போலவே ஆஃப்கானிஸ்தானை முழுக்க இவர்கள் எப்போதும் ஆண்டதுமில்லை….இதற்கு உதாரணம் ஆஃப்கானிஸ்தானில் உள்ள வடக்கு கூட்டணி படையினர். இவர்கள் சிறிய இனக் குழுவாக இருந்த போதிலும் மிகச் சிறிய நிலப்பரப்பை ஆட்சி செய்த போதிலும் ஒரு காலும் இவர்கள் ஓய்ந்து போனதில்லை. சோவியத் யூனியனாக இருந்த காலத்திலேயே இவர்களை ஒன்றும் செய்து விடமுடியவில்லை. அப்போது தாலிபான் எனும் அமைப்பே இல்லை. இவர்கள் நிலை கொண்டு இருக்கும் பிராந்தியம் அத்தகையதொரு நில பரப்பில் அமைந்துள்ளது. பன்ஷிர் பள்ளத்தாக்கு என்று சொன்னாலும் அது அதன் ஆதி பெயர் பஞ்ச சீர் பகுதி.அதாவது நம் பாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்கள் ஆளுகையின் கீழ் இருந்த பகுதி. அவர்களின் அஞ்ஞான வாசம் செய்யும் காலத்தில் தங்கியிருந்த பகுதி என்பர்.

இந்திய உளவு நிறுவனம் ரா வின் நேரடி கட்டுப்பாட்டில்… கண்காணிப்பில்… உள்ள பகுதி என்பவர்களும் உண்டு. நம் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சற்றேறக்குறைய ஏழு ஆண்டுகள் பாதுகாப்பு பணி நிமித்தமாக கழித்த இடம் இது என்பர். இன்று இந்த பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மஸூத் அசாத் தலைமையிலான வடக்கு கூட்டணி படையினர். இவர்கள் காலங்காலமாகவே இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர்கள்.செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்கா படையினர் ஒஸாமா பின் லாடனை தேடி இங்கு அமெரிக்க படைகள் வந்திறங்கிய போது அவர்களுக்கு உதவியவர்கள் இவர்கள்தான். இதனால் அவர்களின் தேடுதல் தளம் குறைந்தது. அப்போதே இந்திய உளவுத்துறை ஒரு தந்திரமான காரியத்தை செய்தது. அதாவது இவர்களை வடக்கு கூட்டணி விடுதலை போராளிகள் அமைப்பு என அமெரிக்காவில் பதிவு செய்து இருக்கிறார்கள். அது இன்று வரை அப்படியே தான் இருக்கிறது.இதனால் என்ன பலன்?

அமெரிக்கா உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளில் தாலிபான்களின் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று அடையாளம் படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன்…. அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பலர் இன்று ஆஃப்கன் அரசின் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இப்படியான சூழ்நிலையில்…..இன்று உள்ள நிலையில் உலக நாடுகள் ஆஃப்கானிஸ்தானில் மனிதாபிமான அடிப்படையில் உதவ இந்த வடக்கு கூட்டணி படையினரின் அமைப்பு மாத்திரமே சட்டபூர்வ அங்கீகாரத்துடன் இருக்கிறது. இவர்களுக்கு செய்யும் ஆயுத தளவாட உதவி கூட சர்வதேச சட்ட வரையறையில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு துணை போனதாக ஆகாது.

இந்த அடிப்படையில் தான் இந்தியா வடக்கு கூட்டணி படையினருக்கு ஆதரவாக தாலிபான்களை எதிர்த்து விமான தாக்குதல் நடத்தி காட்டியது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தாலிபான்களுக்கு ஆதரவாக தனது விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை கொண்டு வடக்கு கூட்டணி படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இது சர்வதேச அரங்கில் பலத்த அதிர்வலைகளை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான கடும் கண்டனங்களை தெரிவிக்க காரணமாக அமைந்தது.

வரும் நிதியாண்டில் பாகிஸ்தானை கருப்பு பட்டியலுக்குள் அடைக்க இந்த ஒரு சம்பவமே போதும் என்று நிலையை அவர்களே உண்டாக்கி வைத்து இருக்கிறார்கள்.ஆரம்ப காலங்களில் அதாவது தாலிபான் இயக்கம் ஆஃப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க குரல் கொடுத்த…. ஆதரவு தெரிவித்த…. நாடுகள் கூட இதன் அடிப்படையில் தான் தற்போது பின் வாங்கின…

பிரிட்டன் மற்றும் ரஷ்யாவும் கூட இதில் அடங்கும்.தற்போது இந்தியா ஆஃப்கன் பிரச்சினையை குவாட் கூட்டமைப்பு நாடுகள் மூலமாக அணுகுவதாக அறிவித்தது ஏன் என்பது பலருக்கும் சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை.ஐநாவின் பாதுகாப்பு முறைமைகள் மற்றும் நிதி உதவி திட்டங்கள் ஆகிய அனைத்துமே தற்சமயம் அமெரிக்கா வழியாகவே நடைபெற்று வருகிறது.அப்படி ஒரு சூழ்நிலையில் இந்த வடக்கு கூட்டணி படையினர் தங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்ய அமெரிக்க செனட் சபையில் உதவி கோர முடியும்.அவர்களும்….

அதாவது வடக்கு கூட்டணி படையினரும் அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அமெரிக்க அரசில் இதனை செய்ய அங்கு ஆட்கள் இருக்கிறார்கள். சட்டப்படியான அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் இதற்காக அங்கு இயங்குகின்றன. இதனை லாபி செய்வதாக சொல்வர்.வடக்கு கூட்டணி படையினர் அப்படி ஒரு நிறுவனத்தை பிடித்து இருக்கிறார்கள்.

ரோபர்ட் ஸ்ட்ரைக் என்கிற நிறுவனம் இந்த வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளது. இதில் வடக்கு கூட்டணி படையினர் சார்பாக அமெரிக்காவில் அலி நஜாரி என்பவர் இயங்குகிறார். இதனை நேற்று 16 ஆம் தேதி அதிகாரபூர்வமாக தெரிவித்து இருக்கிறார்கள்.இது எப்படி யாரால் யாருக்காக…. இயங்குகிறார்கள் என்று நீங்கள் யூகித்து புரிந்து கொண்டால்….. தாராளமாக பாராட்டலாம்……தொடரும்…..

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் ஸ்ரீராம்.

Exit mobile version