மோடியின் மாஸ்டர் பிளானால் பஞ்சாபிலும் ஆட்சிக்கு தயாராகிறது பாஜக !

பஞ்சாபிலும் ஆட்சிக்கு தயாராகிறது பிஜேபி-பஞ்சாபில் தேர்தலுக்கு முன் பிஜேபி பல மாயாஜாலங்களை செய்து விடும் என்றேதெரிகிறது.பல அகாலி தளத்தின் முன்னாள் எம்பி எம்எல்ஏக்கள் ,காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் பிஜேபியில் இணைந்து வருகிறார்கள்.நேற்று ஒரு காமெடி காட்சி பஞ்சாப் அரசியலில் நடைபெற்றது.

பஞ்சாபி பாடகர்பூட்டா முகம்மது காலையில் பஞ்சாப் பிஜேபி தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பிஜேபியில் இணைந்து இருந்தார்.இந்த நிலையில் பூட்டா முகம்மது கேப்டன்அம்ரீந்தர் சிங் உடன் நேற்று இரவு இருந்தார்.உடனே பஞ்சாப் மீடியாக்கள் காலையில் தான் பிஜேபியில் இணைந்தீர்கள்இரவுக்குள் மனம் மாறி கேப்டன் கட்சியி ல் இணைந்து விட்டீர்களா என்று கிண்டலுடன் கேட்டார்கள்.

பதிலுக்கு பூட்டா முகம்மது நோ..நான்பிஜேபியில் தான் இருக்கிறேன். என்னுடைய நண்பரான பாடகர் சர்தார் அலிகான் அம்ரீந்தர் சிங்கின் கட்சியில் இணைய விரும்பினார்.அதனால் அவருடன் துணைக்கு வந்தேன்.கேப்டன் கட்சி பிஜேபியின் கூட்டணி கட்சி.அதனால் அவரைபார்க்க வந்ததில் என்ன தவறு இருக்கமுடியும்? என்று மீடியாக்களை தெறிக்கவிட்டார்.

இதை எதற்கு கூற வருகிறேன் என்றால் பிஜேபி ஒரு டிராக்கில் பிரபலமான ஆட்களை இழுத்து கொண்டு இருக்கிறது இன்னொரு பக்கம் கேப்டன் அம்ரீந்தர் சிங்கும் பல காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ எம்பிக்களை அவருடைய கட்சிக்கு இழுத்து கொண்டு இருக்கிறார்.தேர்தல் நெருங்க நெருங்க பிஜேபி அம்ரீந்தர சிங் கூட்டணி ஒரு பலமான அணியாக மாறி அவர்களாலும் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை உருவாகும் பொழுது காங்கிரஸ் கட்சியின் இப்போதைய எம்எல்ஏக்களும் எம்பிக்களும் பிஜேபி அம்ரீந்தர் சிங் கூட்டணியாக நோக்கி ஓடி வருவது உறுதி.

பாண்டிச்சேரியில் நடைபெற்றது மாதிரியே தேர்தலுக்கு முன்பு பஞ்சாபிலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து காங்கிரஸ் இனி தேறாது என்கிற மனநிலையை பஞ்சாப் மக்களிடம் பிஜேபி ஏற்படுத்தி விடும் அதனால் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுக்க ளை கேப்டன் கட்சி பெற்றுவிடும். வட கிழக்கு மாநிலங்களையே தட்டி தூக்கிய பிஜேபியினால் வட இந்தியாவில் பஞ்சாபில் மட்டும் வளராமல் இருப்பதற்கு காரணம் அகாலி தளம் தான்.

பிஜேபியுடன் நீண்ட நாட்களாக கூட்டணியில்இருந்த ஒரே கட்சி அகாலி தளம் தான்.இந்திய அரசியலில் நூறாண்டுகள் வரலாறு கொண்ட அகாலி தளத்துடன் பிஜேபி ஜனசங்கமாக இருந்த காலத்தில் இருந்நே உறவை வைந்து இருப்பதால் அதனை மீறி பஞ்சாபில் பிஜேபியை வளர்க்க வாஜ்பாய் அத்வானி விரும்ப வில்லை அதனால் அகாலி தளம் அளிக்கிற சீட்டுகளை வாங்கி கொண்டு பிஜேபி ஒரு அடிமையாக பஞ்சாப் அரசியலில் அடங்கிஇருந்தது.

வாஜ்பாய் அத்வானி மாதிரி மோடி அமித்ஷா கிடையாது என்பதால் எந்த வழியிலாவது பஞ்சாபில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து கேப்டன் அம்ரீந்தர்சிங்கிற்கு நூல் விட்டு கொண்டே இருந்தது பிஜேபி.கேப்டனுக்கு பிஜேபியை நோக்கி வர மனசு இருந்தாலும் அகாலி தளத்தின் கூட்டணி தடையாக இருந்து வந்தது.

ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்கமுடியுமா? என்கிற கேள்வி வருவதால்பிஜேபி கூட்டணியில் இருந்த அகாலி தளம் பிஜேபி அம்ரீந்தர் சிங் உறவுக்கு தடையாக இருந்தது.இந்த நேரத்தில் புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.இதுநிச்சயமாக பஞ்சாபில் உள்ள ஜாட் சீக்கியர்களை பாதிக்கும் என்பதால் அகாலிதளம் பிஜேபி கூட்டணியை விட்டு விலகியது.இதனால் பஞ்சாபில் பிஜேபி கதை முடிந்தது என்று நினைத்த காங்கிரஸ் இனி பஞ்சாபில் காங்கிரசை அசைக்கமுடியாது என்று தப்பு கணக்கு போட்டது.இது வரை பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சிஎன்றால் அது அம்ரீந்தர் சிங் ஆட்சியாகவே இருந்தது.

பஞ்சாப் ஆட்சியிலும் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியிலும் அம்ரீந்தர் சிங்கை மீறி சோனியா குடும்பத்தினால்ஒன்றுமே செய்ய முடியாது. மன்மோகன் சிங் மாதிரி பிரதமரையே அடிமையாகவைத்து இருந்த சோனியா குடும்பத்திற்கு அம்ரீந்தர் சிங் முன் அடிமையாக இருக்க முடியுமா?அம்ரீந்தர் சிங்கை பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து தூக்க முடியாமல் சோனியா குடும்பம் தவித்த வந்த நேரத்தில்மோடி விவசாய சட்டங்களை கொண்டுவந்தார்.பஞ்சாப் பற்றி எரிய ஆரம்பித்தது.

பஞ்சாபில் பிஜேபி என்கிற பெயருடன்யாரும் நடமாட முடியாத நிலை உருவானது.அம்ரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து தூக்க இது தான் சரியான நேரம் என்று சோனியா குடும்பம் அம்ரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது.ஏனென்றால் அம்ரீந்தர் சிங் பிஜேபிஆதரவு இன்றி அரசியல் செய்ய முடியாது என்பதால் பஞ்சாபில் பிஜேபிக்கு இருந்த எதிர்ப்பை வைத்து இனி அம்ரீந்தர்சிங் கதையும் முடிந்தது என்று காங்கிரஸ்நினைத்தது.ஆனால் பிஜேபி காங்கிரசின் இந்த நடவடிக்கைகாகவே காத்து இருந்தது போலதெரிகிறது.

ஏனென்றால் முதல்வர் பதவியை விட்டு நீக்கப்பட்டதும் அம்ரீந்தர் சிங்அமித்ஷாவை அடிக்கடி டெல்லி சென்றுபார்க்க ஆரம்பித்தார். காரணம் கேட்டால்மத்திய அரசு விவசாய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று அமித்ஷாவிடம்வலியுறுத்தினேன் என்பார்.மத்திய அரசு விவசாய சட்டங்களை நீக்கி னால் பிஜேபியுடன் இணைந்து அரசியல்செய்ய தயார் என்று அடிக்கடி கூறி வந்தார்.பதிலுக்கு காங்கிரசும் மீடியாக்களும்மோடியாவது விவசாய சட்டங்களை வாபஸ் வாங்குவதாவது?

அத்தைக்கு மீசை முளைத்தால் தான் இதெல்லாம் நடக்கும் அம்ரீந்தர் சிங்கை கிண்டல் செய்தார்கள்.ஆனால் யாருமே எதிர்பாராத வகையில்மோடி விவசாய சட்டங்களை வாபஸ் செந்தார்.இதை காங்கிரஸ் நிச்சயமாக. எதிர்பார்க்க வில்லை விவசாய போராட்டங்க ளை தூண்டி பஞ்சாபில் ஆட்சியை தக்கவைக்கவும் பிற மாநிலங்களில் பிஜேபி ஆட்சியை காலி செய்ய காத்து இருந்த காங்கிரஸ் அந்தோ பரிதாபமாக இப்பொழுது உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா என்று சோனியா குடும்பத்தைபார்த்து கதற ஆரம்பித்து இருக்கிறது..பதிலுக்கு நேற்று வரை அம்ரீந்தர் சிங்மட்டுமே இருந்த பஞ்சாப் லோக் காங்கி ரசில் இப்பொழுது வண்டி வண்டியாகவந்து காங்கிரஸ் தலைவர்கள் இணைந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதோடு நேற்று வரை பஞ்சாப் சீக்கியர்களிடம்பிஜேபி எம்எல்ஏக்களே அடி வாங்கி ஓடி ஒளிந்த நிலை மாறி .முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பஞ்சாப் பாடகர்கள் சினிமா பிரபலங்கள் என்று ஒரு படையே பிஜேபியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.நேற்று பஞ்சாப் மாநில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான லத்தோர் மற்றும் அவருடைய மகன் கௌதம் கிரிஸ் லத்தோர் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில எஸ்சி பிரிவு செகரட்டரி ஜஸ்வீர் சிங் பஞ் சாப் மாநில சிரோன்மணி குருத்வாரா கமிட்டி உறுப்பினர் ஹ்பால் சிங் என்று ஒரு படையே பிஜேபியில் இணைந்துஇருக்கிறது .

இதை விட முக்கியமாக முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் சரன்சிங் சித்து மற்றும்பஞ்சாப் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லதோர் இருவரும் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட கடந்த ஜூ ன் மாதம் ஆரம்பித்த கிரி கிசான் ஷேர் இபஞ்சாப் பார்ட்டி என்கிற அரசியல் கட்சியும் பிஜேபியுடன் இணைய இருக்கிறது.

விவசாய சட்டங்களை நீககியதன் மூலமா க பிஜேபி்க்கு பஞ்சாப் அரசியலில் மீண்டும் ஒரு என்டரி கிடைத்து இருக்கிறது. இதை விட விவசாய சட்டங்களை மத்திய அரசு நீக்க நானே காரணம் என்கிற அம்ரீந்தர் சிங்கின் பிரச்சாரம் அவருடைய அரசியலுக்கு வெற்றி கிடைக்க வழி வகுக்கும் .ஒன்று இழந்தால் இன்னொன்று கிடைக்கும் என்கிற தத்துவப்படி பஞ்சாபில் அரசியலை இழந்தாலும் இந்திய விவசாயிகளுக்கு நல்லது கிடைக்கட்டும் என்று மோடி நினைத்து விவசாய சட்டங்களைகொண்டு வந்தார். ஆனால் எதிலும் இற ங்கி வராத மோடி விவசாய சட்டங்களைவாபஸ் செய்ததன் மூலமாக காலம் விவசாயிகளின் நலனை விட பஞ்சாபில் பிஜேபி ஆட்சிக்கு வருவதையே விரும்புகிறது என்றே நினைக்க தோன்றுகிறது.

கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version