அடுத்தடுத்து ராஜ்நாத்சிங்,மோடி,அமித்ஷா வருகை தமிழக அரசியலில் புயலை கிளப்பும் பாஜக.

கோவை தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது.


பிரதமர் சென்னை வந்த போது பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., இருகட்சியின் தொண்டர்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதே போன்று கோவையில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படும் என்றும். ஏழு குறிப்பிட்ட சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் பிரிவில் இணைக்கப்பட்டது.


இது லோக்சபாவில் புதிய மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என சென்னையில் பிரதமர் உறுதியளித்து உள்ளார். மதுரையில் நடந்த தாமரை சங்கமம் மாநாட்டின் போதே இது ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக தற்போது தேவேந்திர குல மக்களின் அங்கீகாரம் மீட்கப்பட்டுள்ளது என்றார்.

சட்டசபை தேர்தல் பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.

இதுபோல் வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜ., இளைஞர் அணி தாமரை இளைஞர்கள் சங்கமம் மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசுகிறார்.

வரும் 25 அன்று அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோவை வரும் பிரதமர் மோடி, பா.ஜ., சார்பில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.


பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும்.
தொகுதி எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருக்கும்.வெற்றிவேல் யாத்திரையின் மூலம் அனைத்து கட்சியினரும் வெற்றிவேலை ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோல் விழுப்புரதிற்க்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைதர உள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

அடுத்தடுத்து ராஜ்நாத் சிங்,மோடி,அமித்ஷா வருகை தமிழக அரசியலில் புயலை கிளப்பும் பாஜக என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version