சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

சூர்யாவின் சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் திரும்ப திரும்ப வரும்…

20 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய பணக்காரரான ரத்தன் டாடாவினாலேயே ஒரு விமான கம்பெனியை ஆரம்பிக்க முடியவில்லை என்று..

அது ஏன் என்று யாராவது ஆராய்ந்ததுண்டா?

இன்று ஏகப்பட்ட கடனில் இருக்கும் ஏர்இந்தியா நிறுவனமே 1932-ல் ஜே.ஆர்.டி. டாடாவினால் ஆரம்பிக்கப்பட்டது தான்.

தபால்களை கொண்டு செல்ல #டாடாஏர்சர்வீஸ் என்று ஆரம்பிக்கப்பட்டு லாபகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிறுவனம் பிறகு #டாட்டாஏர்லைன்ஸ் என்று பெயர் மாற்றம் கண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946-ல் #ஏர்இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் சேவையை ஆரம்பித்தது.

மிகவும் வெற்றிகரமாக செயல்பட்ட நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை தேச விடுதலைக்குப் பின் 1953-ல் நேரு தலைமையிலான இந்திய அரசு வாங்கி அந்த நிறுவனத்தை அரசுடமையாக்கியது. அப்போதும் ஜி.ஆர்.டி. டாட்டாவே அந்த நிறுனத்திற்கு 1977 வரை தலைமை வகித்து வந்தார்.

அதன் பிறகு இந்திரா காந்தியின் ஆட்சியில் ஏர் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு சேவைகள் இந்தியன் ஏர்லைன்ஸ் என்று பிரிக்கப்பட்டு இன்று அரசியல்வாதிகளால் சீரழிந்து கிடக்கிறது.

அதன் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாட்டா நிறுவனம் பலமுறை முயற்சித்த போதும் ஊழல் காங்கிரஸ் அரசாங்கம் அதை தொடர்ந்து தடுத்து வந்தது.

ஜெட்_ஏர்வேசின் நரேஷ் கோயல் (படத்தில் பிரகாஷ் கோயல்) காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் மந்திரிகளுடன் இணைந்து வேறு எந்த நிறுவனமும் வராமல் பார்த்துக் கொண்டார்.

டெக்கான் ஏர்லைன்சின் கேப்டன் கோபிநாத் நிறுவனத்தை ஆரம்பிக்க விடாமல் அனைத்து முட்டுக் கட்டைகளையும் போட்டது இவரே.

இவருடன் இணைந்து விஜய் மல்லையாவும் காங்கிரஸ் கட்சியின் ஆசிர்வாதத்துடன் பல இன்னல்களை கொடுத்தனர்.

படத்தில் ஒரு காட்சி வரும்.. அன்று குடியரசு தலைவராக இருந்த மறைந்த திரு.அப்துல் கலாம், கோபிநாத் விமான சேவை ஆரம்பிக்க அதனது ஆதரவு கடிதத்தை தருவார்.

அப்போது வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி. ஆனால் அப்போதும் நரேஷ் கோயலின் கையே ஓங்கியிருக்கும். காரணம் ஊழல் அரசு அதிகாரிகள் அவர் கைப்பாவைகளாக இருந்ததனால்.

20 ஆண்டுகளாக ஏர்லைன்ஸ் ஆரம்பிக்க முடியாமல் அலைகழிக்கப்பட்ட டாட்டா நிறுவனம், மோடிஜி ஆட்சிக்கு வந்தவுடன் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து #விஸ்தாரா_ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து இன்று வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

கேப்டன் கோபிநாத்தை பல விதங்களில் முடக்கிய நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இன்று மூடுவிழா கண்டுவிட்டன.

ஒருவர் நிதிமுறைகேட்டில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்க இன்னொருத்தர் வெளிநாட்டுக்கு ஓடிப் போய் தன் சொத்துக்களை ஏலம் விட வேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் அரசின் அதிகார துஷ்பிரயோகங்கள் எதனையும் குள்ளன் தன் படத்தில் சொல்லவில்லை. அதே போல் கேப்டன் கோபிநாத் தனது விமான நிறுவனத்தை வாஜ்பாய் அரசில் தான் ஆரம்பித்து நடத்த முடிந்தது என்பதனையும், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான டாட்டா நிறுவனம் மோடிஜி ஆட்சியில் தான் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கவே முடிந்தது என்பதையும் படத்தில் மறைத்து விட்டார்கள்.

என்ன தான் கருப்பு சட்டை போட்டு படத்தில் சீர்திருத்த திருமணம் செய்தாலும்.. கருப்பு சட்டை போடும் நாய்கள் எல்லாம் பொய் தான் சொல்லும் என்பதனை தெளிவாக சொல்லி விட்டார் சூர்யா.

பொய்யரை தூற்று.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் கிருஷ்ணன் தசரதன்

Exit mobile version