தமிழகத்தின் ஆளுநரா முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2 வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின் நேற்று முன் தினம் அமைச்சரவை முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவையில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. பட்டியல் இன பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டார்கள்.

தமிழகத்தை சேர்ந்த பாஜக முன்னாள் தலைவர் முருகன் மத்திய இணை அமைச்சரானார். மேலும் 13 அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தார்கள். பிரகாஷ் ஜவடேகர்,ரவி சங்கர் பிரசாத் ரமேஷ் பொக்ரியல் என முக்கிய அமைச்சர்கள் பதவி விலகியது எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. பழைய அமைச்சரவையில் மத்திய சட்டம் நீதி தகவல் தொழில்நுட்பம் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிராத் ராஜினாமா செய்தார்.

பா.ஜ.க மூத்த தலைவரான இவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார்.தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பதவிக் காலம் 2022 அக்டோபரில் முடிகிறது. இவரை மாற்றி விட்டு ரவிசங்கர் பிரசாத் விரைவில் புதிய கவர்னராக நியமிக்கப்படலாம். என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் தமிழகத்தில் கட்சியை வளர்க்க புதிய யுத்திகளை கையாண்டு வருகிறது பாஜக. இளம் வயது அண்ணாமலையை தலைவராக கொண்டு வந்துள்ளது பாஜக.

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முழு மூச்சுடன் தயாராக வேண்டும் என டெல்லி உத்தரவு பிறப்பித்துள்ளதாம். அதன் தொடர்ச்சியாக தான் முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அண்ணாமலை பாஜக புதிய தலைவர் என புதிய வேகத்தில் இறங்கியுள்ளது பா.ஜ.க

Exit mobile version