கோவில் வெறும் வழிபாட்டு தலம் மட்டுமல்ல..பல நூறு தொழில்களின் அடிப்படை ஆதாரமே கோவில்கள்தான்..

அவைகள்;

1.கற்பூரம் தயாரிப்பாளர்..
2.ஊதுவத்தி தயாரிப்பாளர்..
3.சுவாமி சிலைகள் தயாரிப்பாளர்
4.கோவிலுக்கு வெளியில் உள்ள தேங்காய் கடை பூ கடை அகல் விளக்கு கடை பால் விற்கும் அம்மா.. பழக்கடைக்காரர்.. மொட்டை அடிக்கும் நபர்கள்.. காது குத்துபவர்கள் பொறி விற்கும் தாத்தா.. திருவிழாவின் போது,

1..சாமி தூக்கும் நபர்கள் 2. விளக்கு அலங்காரம் செய்பவர் 3. பிரசாதம் செய்பவர் 4. இசை நிகழ்ச்சி செய்பவர்கள்(நாதஸ்வரம்,மேளம்) 5.கோவில் சிப்பந்திகள் 6.மாலை வியாபாரம் செய்பவர் 7.சாமி வீதியுலா வர பயன்படும் பலவகையான வாகனம் செய்ப்பவர்கள்.. 8.பலூன் விற்கும் நபர் 9.சடல் சுற்றுதல்,ராட்டினம் விளையாட்டு சுற்றும் நபர்கள் கிராம கோவில் திருவிழாக்களை நம்பி இருந்தனர்.. 10.சாமி படம் விற்பவர்கள் உணவளித்து மகிழ்தல்..

1.தினமும் அன்னதானம் 2. ஆதரவு இல்லா நபர்கள் தங்கி வாழும் இடம்.. பல காலமாக பல நூறு தொழில்கள் பல ஆயிரம் குடும்பங்கள்,பல லட்சம் மக்கள் கோவில் மற்றும் கோவில் திருவிழாக்களை அடிப்படையாக கொண்டு தனது வாழ்வை நடத்தி வருகிறார்கள்.

எனவே கோவில் நம் தமிழரின் வாழ்வோடு கலை,வியாபாரம்,வாழ்வு என பல செயல்களில் தொடர்பு உடையது.. ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும் கோவிலின் தொன்மையும்,அதன் சிறப்பும் என்றும் அழியாத அற்புதம்..

கட்டுரை:- எழுத்தாளர் அருணகிரி சிதம்பரநாதன்

Exit mobile version