நிவர் புயல் : சாதித்து காட்டிய அ.தி.மு க அரசு! 48 மணிநேரம் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை! பெரும் சேதம் தவிர்ப்பு

நிவர் புயல் அரசு இயந்திரங்கள் 48 மணிநேரமும் செயல்பட்டது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உணவுப்பொருட்கள், பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை சுமந்தபடி அங்கும் இங்கும் வருவாய்த்துறையினரின் வாகனங்கள்.மின் கம்பிகள், மின் ஒயர்கள், மின்பழுது நீக்கி உபகரணங்கள், மாற்று மின்சாதன உபகரணங்களுடன் மின்வாரிய ஊழியர்களும். பேரிடரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதற்காக நீச்சல் வீரர்கள், தீயனைப்பு மற்றும் மீட்புப் படையினர்..

சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றிட தயார் நிலையில் மின்ரம்பம், கத்தி, கோடாளி, கடப்பாறை, மன்வெட்டி சகிதமாய் நெடுஞ்சாலை துறை. விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனை கொண்டு செல்ல தயார் நிலையில் ஏராளமான ஆம்புலன்ஸ்கள்; மருத்துமனைகள்; மருத்துவர்கள்; செவிலியர்கள்; மருத்துவ ஊழியர்கள்.

எல்லாம் சரியானபடி இயங்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும், ஏற்பட்டால் உடனடியாக மீட்கவும் மழைகோட்டுகளுடன் உச்சபட்ச தயார் நிலையில் ஓவரால் ஆல்ரவுண்டர்களாக சாலைகளில் ஒட்டுமொத்த போலீசும் களத்தில் மழையிலே.ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும், அரசு இயந்திரங்களும் களத்திலே..

மக்களிடம் பழனிச்சாமி மேல் ஒரு சிறிய அதிருப்தியும் இல்லை என்பது இப்பொழுதும் தொடர்கின்றது, யாரும் இதுவரை தாங்களாக ஒரு சிறு எதிர்ப்பும் அவர்மேல் தெரிவிக்கவில்லை அதற்கு வாய்ப்பினை பழனிச்சாமி கொடுக்கவில்லைதன் ஆட்சிகாலத்தில் மக்களின் ஒரு எதிர்ப்பையும் சம்பாதிக்காமல் கடைசியாக ஒரு புயலையும் கடந்து செல்கின்றார் பழனிச்சாமி

மற்றபடி, வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து, தொலைகாட்சி பார்த்தபடியே , சூடான பக்கோடா, பஜ்ஜியுடன், சுவையான நால்வகை சட்டிணி சேர்த்து உண்டு, இஞ்சி, ஏலக்காய் மணம் கமகமக்க குளிருக்கு இதமாய் கொதிக்க கொதிக்க சூடான தேநீரையும் அருந்தி, இது சரியில்லை, அது சரியில்லை, இது நொள்ளை, இது சொள்ளை என நொட்டை சொல்ல வரும் திருவாளர்கள் நொண்ணையர்கள் சொல்லி கொண்டே தான் இருந்தார்கள்.

Exit mobile version