காங்கிரஸ்க்கு அல்வா கொடுத்த திமுக கழற்றிவிடவும் முடிவு.

காங்கிரஸ்க்கு திமுக கொடுத்த அல்வா- அடுத்த மாதம் 4 ம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் இரண்டு இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தலில் திமுகவே இரண்டு இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.ஆக இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபை உறுப்பினர் கிடையாது என்று திமுக தெளிவாக அறிவித்து இருக்கிறது.

இதன் மூலமாக 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசை திமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிடவும் வாய்ப்புகள் இருக்கிறது.ஏனென்றால் இந்த ராஜ்யசபா தேர்தலை திமுக விருப்பம் எப்படியோ அதே மாதிரதான் தேர்தல் கமிசன் நடத்தி இருக்கிறது/தமிழகத்தில் காலியாக இருந்த 3 ராஜ்யசபா இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டாம் தனித்தனியாக நடத்துங்கள் என்று திமுக தேர்தல் கமிசனிடம் அளித்த கோரிக்கையை தேர்தல் கமிசன் செயல்படுத்தி இருக்கிறது.

ஒரு வேளை மூன்று ராஜ்ய சபா இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்று இருந்தால் அதிமுகவுக்கும் 1ராஜ்யசபா எம்பி கிடைத்து இருக்கும்.ஆனால் அவ்வாறு நடைபெறாமல் திமுகவின் ஆசைப்படி ராஜ்யசபா தேர்தலை தனித்தனியே நடத்தி திமுகவிற்கு 3 ராஜ்யசபா எம்பிக்களை கிடைக்க மறைமுகமாக உதவி செய்து இருக்கிறது பிஜேபி பதிலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு அளிக்காமல் 3 இடங்களையும் திமுகவே அள்ளி எடுத்துவிட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி புதிய கவர்னருக்கு எதிராக போராட்டம் என்று சீன் போட்டு திமுகவிடம் 1 ராஜ்யசபா எம்பி பதவியை பெற்று விடலாம் என்று கனவில் இருந்தார்.ஐயோ பாவம் திமுக காங்கிரஸ்க்கு அல்வா கொடுத்து விட்டது. திமுகவை பொறுத்த வரை காங்கிரஸ் இனி காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று நம்புவதால் தமிழகத்தில் காங்கிரசை ஊறுகாய் மாதிரி பயன்படுத்தி கொள்ளவே நினைக்கிறது.

2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்குகடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக அளித்த 9 தொகுதிகளை கூட அளிக்காமல் 4 அல்லது 5 தொதிகளுக்கு மேல் தர முடியாது என்று கூறி காங்கிரசை திமுகவே கழற்றி விடும் என்று எதிர் பார்க்கலாம்.இதனால் பிஜேபி எதிர்ப்பு வாக்குகள் சிதறி 2024 லோக்சபா தேர்தலில் பிஜேபி ஓரளவு வெற்றி பெற்று தமிழகத்தில் வலுவாக வளர வழி வகுக்கும்.

காங்கிரஸ் காணாமல் போகும்.இதற்கான அரசியலை இரண்டு கட்சிகளும் தெளிவாக செயல்படுத்தி வருகின்றன.திமுக VS பிஜேபி இடையே நடைபெறும் அரசியல் என்பது ஒரு திட்டமிடப்பட்ட நீண்ட கால தொலை நோக்கு அரசியலாகும்.இதனால் அதிமுக காணாமல் போய் விடும் என்று திமுக நினைக்கிறது.

காங்கிரஸ் அழிந்துவிடும் என்று பிஜேபி நினைக்கிறது.அதிமுக அழிய நேரிடும் பொழுது திமுகவுக்கு தேர்தலில் பெரிய அளவில் கூட்டணி தேவைப்படாது.தனியாகவே நின்று வெற்றிபெற முடியும். இதை பயன்படுத்தி பிஜேபியும் சில கட்சிகளின் துணையுடன் ஓரளவு வெற்றி பெற முடியும்.நாளடைவில் திமுக VS பிஜேபி போட்டிஅரசியல் பிஜேபியை தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பிஜேபி தான் என்கிற நி லையை உருவாக்கும்.

அதிமுகவுக்கும் மேற்கு வங்காளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை இருக்கிறது. இரண்டும் 1977 ல் ஒரே நேரத்தில்தான் ஆட்சிக்கு வந்தது.மார்க்சிஸ்ட்களின் ஒப்பற்ற தலைவர் ஜோதிபாசுவின் மரணத்திற்கு பிறகு ஒரே ஒரு தேர்தலில் 2006 தேர்தலில் மட்டுமே மார்க்சிஸ்ட்களால் ஆட்சியை பிடிக்க முடிந்தது.

2011 ல் 34 வருட தொடர் ஆட்சியை பறி கொடுத்த மார்க்சிஸ்டுகளால் மீண்டும் ஆட்சியை பிடிக்கமுடியாமல் போய் இப்பொழுது ஒரு சிங்கிள் எம்எல்ஏ கூட இல்லாமல் போக காரணம் என்னவென்றால் மேற்கு வங்காள அரசியலை திட்டமிட்டு திரிணாமுல் காங்கிரஸ் VS பிஜேபி என்று கொண்டு சென்றார்கள்

.இதனால் மார்க்சிஸ்ட்களிடம் இருந்த முஸ்லிம்வாக்குகள் திரிணாமுல் காங்கிரசுக்கும் இந்துக்களின் வாக்குகள் பிஜேபிக்கும் சென்றது. இதனால் தான் மேற்குவங்காளத்தில் இடதுசாரிகள் அட்ரஸ் இல்லாமல் போனார்கள் அது மாதிரியே தமிழகத்தில் திமுக VSபிஜேபி அரசியல் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அதிமுகவிடம் இருந்த முஸ்லிம் கிறிஸ்தவ வாக்குகள் திமுகவிற்கு சென்றுவிட்டது. இனி அதிமுகவிடம் உள்ள இந்துக்களின் வாக்குகள் மெல்ல மெல்ல பிஜேபியை நோக்கி நகர ஆரம்பிக்கும்.இந்துக்களின் வாக்குகள் முழுமையாக பிஜேபிக்கு இடம் மாற சிறிது காலம் பிடிக்கும்.அது நடைபெறும் பொழுது மேற்கு வங்காளம் தமிழகம் ஆந்திரா என்று பிஜேபிக்கு அடித்தளமே இல்லாத மாநிலங்களில் கூட பிஜேபி வளர்ந்து ஆட்சிக்கு வந்து விடும்.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்றது மாதிரியே இப்பொழுது தமிழகத்தில் நடைபெறுவது மாதிரி ஆந்திராவிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் VS பிஜேபி என்று அரசியல் நடைபெற ஆரம்பித்து விட்டது.மம்தா பானர்ஜி,ஸ்டாலின்,ஜெகன் மோன் ரெட்டி போன்றவர்கள் எதற்கு மாநிலத்ல் அவர்களின் எதிரியை அழித்து அந்த இடத்திற்கு பிஜேபியை கொண்டு வரநினைக்கிறார்கள் என்றால் பிஜேபியை எதிரியாக கொண்டு வந்தால் அவர்களால் நீண்ட காலத்திற்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும்.

ஏனென்றால் பிஜேபி முழுமையாக வளர்ந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தது 10 வருடங்களாவது தேவைப்படும்.இந்த காலக்கட்டத்தில் அவர்களும் நன்றாக அவர்களுடைய மாநிலத்தில் வலுவாகி விடுவார்கள். அவர்களுடைய எதிரிகள் காணாமல் போய் விடுவார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் திமுக VS அதிமுக என்று போட்டி இருந்தால் அடுத்த தேர்தலிலேயே திமுக ஆட்சியை இழந்து அதிமுக ஆட்சிக்கு வந்து விடும். ஆனால் திமுக VS பிஜேபி என்று தமிழக அரசியல் தொடர்ந்தால் இன்னும் 10 வருடத்திற்கு திமுக ஆட்சிதான்.ஏனென்றால் பிஜேபி வளர எடுத்து கொள்ள ஆகும் காலம் வரை திமுக ஆட்சியைதொடர்ந்து தக்க வைத்து கொள்ள முடியும்.

அதே நேரத்தில் திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் அதிமுக அழிந்துவிடும்.மம்தா பானர்ஜியின் தொடர் ஆட்சியினால் சித்தாந்தரீதியாக வலுவாக இரு மார்க்சிஸ்ட் கட்சியே மேற்கு வங்காளத்தில். காணாமல் போய் விட்ட பொழுது அதிமுக எம்மாத்திரம் ? இதே மாதிரி திமுக ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து இருந்தால் தலைவர்களின் கவர்ச்சியை மட்டுமே வைத்து இருக்கும் அதிமுக வெகு சீக்கிரத்தில் அதிமுக காணாமல் போய் விடும்.

இதற்கு தான் திமுக VS பிஜேபி அரசியல் வழி வகுக்கும் திமுக நினைத்து இருந்தால் இப்பொழுது நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரசிற்கு ஒரு ராஜ்யசபா இடத்தை அளித்து இருக்க முடியும். ஆனால் செய்யவில்லை பிஜேபி நினைத்து இருந்தால் 3 ராஜ்யசபா இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடைபெற வைத்து தன்னுடைய கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பியை கிடைக்கும் படி செய்து இருக்க முடியும்..

ஆனால் இருவருமே செய்யவில்லை.பிஜேபியின் எதிரியான காங்கிரஸ் பலம் அடையகூடாது என்று திமுக செயல்படுகிறது. பதிலுக்கு திமுகவின் எதிரியான அதிமுக பலம் அடையக் கூடாது என்று திமுகவின் ஆசையான ராஜ்யசபா தேர் தலை தனித்தனியாக நடைபெறவைத்து பிஜேபி திமுகவுக்கு துணை நிற்கிறதுஇது தாங்க உண்மையான அரசியல்.

கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version