திமுக அரசு கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்ய தீவிரம் -நாராயணன் திருப்பதி அதிரடி.

கோவில்களிலிருந்து தங்கத்தை எடுத்து உருக்கி, வங்கியில் சேமித்து அதை பல கோவில்களுக்கு செலவு செய்ய அரசுக்கு உரிமையோ, அதிகாரமோ உறுதியாக இல்லை.கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி வங்கியில் சேமிக்கக்கூடாதா? தாராளமாக சேமிக்கலாம். ஆனால், அதை செய்ய வேண்டியது கோவில்கள் தானே தவிர, அரசுக்கு உரிமை இல்லை.திருப்பதி கோவில், சோம்நாத் கோவில் போன்ற பல்வேறு கோவில்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்களே?ஆமாம்.

உண்மை தான். ஆனால் அந்த நகைகள் அந்தந்த கோவில்களின் சொத்தாக தான் இருக்கும். அந்த நகைகளை வங்கியில் சேமிப்பதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய் அந்தந்த கோவில்களின் மேம்பாட்டிற்கு தான் உபயோகிக்கப்படும். தமிழக அரசு சொல்வது என்ன?தமிழகத்தில் உள்ள பல கோவில்களிலிருக்கும் தங்க நகைகளை உருக்கி மொத்தமாக அவற்றை வங்கியில் சேமித்து அதில் கிடைக்கும் வட்டி வருவாயை அனைத்து கோவில்களுக்கும் செலவு செய்வோம் என சொல்கிறது.இதை ஏன் செய்யக்கூடாது?

கோவில் சொத்துக்களுக்கு அந்தந்த கோவில்களில் குடியிருக்கும் தெய்வங்களே சொந்தக்காரர் என்று சட்டம் சொல்கிறது. இதை உச்சநீதி மன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது. (Deity is the owner of the Temple). தி மு க அரசு கூறுகிற திட்டத்தின் அடிப்படியில் கோவில் சொத்துக்கள் பொது சொத்துக்களாக கருதப்பட்டு ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்று அரசுக்கு சொந்தமாகி விடும். அதாவது கோவில் சொத்துக்களை அரசு மறைமுகமாக கையகப்படுத்தும் முயற்சியே இது. மக்களுக்கு இது எப்படி பாதகமாகும்?மக்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றவே குறிப்பிட்ட கோவிலுக்கு/தெய்வத்திற்கு காணிக்கை செலுத்துகின்றனர்.

அப்படி செலுத்தப்பட்ட காணிக்கைகளை அந்த கோவிலின் மேம்பாட்டுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்பதே நியதி. பொது செலவு என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டால் மக்கள் கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவதை நிறுத்தி விடும் வாய்ப்பு உள்ளது. இது சட்ட விரோதமா?ஆம்! ஹிந்து அறநிலைய துறை என்பது கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் ஒரு அமைப்பே.

அதற்கு மேல் கோவில் நிர்வாகத்தில் அதற்கு அதிகாரமில்லை. அறங்காவலர்கள் தான் நிர்வாகத்தை நடத்த வேண்டும். அப்படி நிர்வாகத்தில் முறைகேடுகள் அல்லது இடர்பாடுகள் எழும் போது அதை சரிசெய்து சீரமைக்கும் பணி மட்டுமே ஹிந்து அறநிலையத்துறையின் பணி. கோவில் சொத்துக்களுக்கு முழு உரிமையும் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்திற்கு மட்டுமே. ஒரு சிறு துரும்பின் மீது கூட அரசுக்கு உரிமையில்லை. பல கோவில்களிலிருந்து தங்கத்தை எடுத்து உருக்கி, வங்கியில் சேமித்து அதை பல கோவில்களுக்கு செலவு செய்ய அரசுக்கு உரிமையோ, அதிகாரமோ உறுதியாக இல்லை.

என பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Exit mobile version