உத்திர பிரேதேசத்தில் யோகியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கருத்து கணிப்பில் தகவல்.

ஏபிபி சிவோட்டர் சர்வே உத்தரபிரதேசத்தில் பிஜேபி குறைந்தது 260 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறுகிறது.உத்திரபிரதேசத்தில் பிஜேபியின் வெற்றிகிட்டதட்ட உறுதி செய்யப்பட்டது என்றா லும் கூட்டணிகள் அமைவதை பொறுத்தே தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகும்.

இதுவரை அகிலேஷ்யாதவ் காங்கிரஸ் உடன் கூட்டணியை பற்றி வாய் திறக்கவில்லை.ஆனால் தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக காங்கிரஸ் உடன் கூட்டணியை உறுதி செய்வார்.சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணி பிஜேபியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க முடியாது என்றாலும் பிஜேபிக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்பதால் பிஜேபி வெற்றி பெறப்போகும் தொகுதிகளை முடிவு செய்ய இருப்பது பகுஜன் சமாஜ் கட்சியும்,ஓம்பிரகாஷ் ராஜ்பார் தலைமையில் உருவாகும் கூட்டணியும் தான்.

உத்தபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு இரண்டு கட்சிகளிடை யே தான் கூட்டணி இருக்க முடியும் என்று தெரிகிறது ஒன்று அப்னா தளம் (சோனா லால்) இன்னொன்று நிஷாத் பார்ட்டி அப்னா தளம் உத்தர பிரதேசத்தில் யாத வர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் குர்மி இன மக்களுக்காக உருவான கட்சி உத்தரபிரதேசத்தில் சுமார் 15 சதவீதம் உள்ள யாதவர்களுக்கு அடுத்து ஓபிசி பிரிவில் சுமார் 9 சதவீதம் அளவில் குர்மி க்கள் இருக்கிறார்கள். காலம் காலமாகவே குர்மிக்களுக்கும் யாதவர்களுக்கும் ஆகாது என்பதால் குர்மிக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு எதிரான அரசியலையே முன்னெடுத்து வருகிறார்கள்.

கன்ஷிராமுடன் இணைந்து அப்னா தளததின் நிறுவனர் சோனாலால் படேல் பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கி தலித் குர்மி என்கிற சாதி கணக்கை வைத்துபகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தார். கன்ஷிராம் மறைவிற்கு பிறகு மாயாவதிக்கு முன்னாள் தாக்கு பிடிக்க முடியாமல் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய சோனாலால் படேல் அப்னா தளம் என்கிற கட்சியை உருவாக்கி குர்மி இன மக் களிடையே அரசியல் எழுச்சியை உருவாக்கினார்.ஆனால் அந்தோ பரிதாபமாக சோனாலா ல் படேல் ஒரு சாலை விபத்தில்மரணமடைய அவருடைய மகள் அனுப்பிரியா படேலும் மனைவி கிருஷ்ணா படேலும் அரசியலுக்கு வந்து பிறகு அவர்களுக்குள் அடித்துக் கொண்டு அப்னா தளத்தை இரண்டாக பிரித்து கொண்டார்கள்.

சோனாலாலின் மகள் அனுப்பிரியா படேலின் அப்னா தளம் பிஜேபி கூட்டணியில் இருக்கிறது.அனுப்பிரியா படேலின் தாய் கிருஷ்ணா படேலின் அப்னாதளம் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. குர்மிக்களின் ஆதரவு அனுப்பிரியா படேலுக்கு இருப்பதால் தான் உத்தர பிரதேச தேர்த லை முன் வைத்து அவரை இப்பொழுது மத்திய அமைச்சராக்கி இருக்கிறார்கள் பிஜேபியின் இன்னொரு கூட்டணி கட்சி யான நிஷாத் பார்ட்டியின் தலைவரான சஞ்சய் நிஷாத் யோகி அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். சஞ்சய் நிஷாத்தும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி தான் நிஷாத் பார்ட்டியை உருவாக்கினார்.

நிசாத் பார்ட்டி.(நிர்பல் இந்தியன் சோஷி த் ஹமாரா ஆம் தளம்). பெயரே வித்தியா சமா இருக்கிறதல்லவா இந்த நிஷாத் பா ர்ட்டியும் ஒரு சாதிக்கட்சிதான், ராமாயண த்தில் ராமபிரான் காட்டுக்கு போகும் பொ ழுது கங்கையை கடக்க அவரையும் சீதா தேவி லஷ்மணனை படகில் அழைத்து சென்று விடுவாரே குகன்.அவர் வழியில் வந்தவங்க தான் இந்த நி ஷாத் மக்கள்.இன்றைக்கும் கங்கையில் படகு இயக்கி கொண்டிருப்பவர்கள் இந்த நிசாத் மக்கள் தான்.காலம் காலமாக காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த நிஷாத்கள் காலப்போக்கில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளாகி விட்டார்கள்.

இவர்கள் பிரிக்கும் பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை பொறுத்து தான் பிஜேபிக்கு கிடைக்க இருக்கும் தொகுதிகள் முடிவாகும் கடந்த 2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் நிசாத் பார்ட்டி பீஸ் பார்ட்டி கூட்ட ணி பிரித்த வாக்குகள் தான் பிஜேபிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்தது.இம்முறை ராஜ்பார் உவைசி ஆசாத் கூட்டணி பிரிக்கும் வாக்குகளினால் பிஜேபிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

Exit mobile version