உபி அரசியலில் எதிர்பாராத திடீர் திருப்பம் ! என்ன செய்யப்போகிறார் யோகி ?

இந்திய `திருநாட்டில் மிகப்பெரிய மாநிலமும் அதிகம் மக்கள் தொகைக்கொண்ட மாநிலமாக உள்ளது உத்திரபிரேதேசம் தான் நாட்டின் ஆட்சியதிகாரத்தை நிர்ணையிக்கும் மாநிலமும் இதுதான் இங்கு கடந்த முறை நடைபெற்ற நடாலும்மன்றம்,சட்டமன்றத்தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இங்கு வருகின்ற ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது ஆட்சி செய்துவரும் யோகி அரசு மிக அசுரபலத்துடன் மீண்டும் வெற்றிபெறும் என்று நடைபெறுவரும் கருத்துக்கணிப்புகளில் தெரியவருகின்றது,அதேபோல் அங்கு எதிர் கட்சி என்று சொல்லிக்கொள்வதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் தற்பொழுது ஓர்திடீர் திருப்பம் நடைபெற்றுள்ளாது.

நேற்று வரை பிஜேபி எதிர்ப்பு மனநிலையில் இருந்த சுகல்தேவ் பாரதிய சமாஜ் பார்ட்டி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் இன்று பிஜேபியுடன் கூட்டணிக்கு தயார் என்று கூறி இருக்கிறார்.கடந்த 2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபி மிகப்பெரிய வெற்றியைபெற சுகல்தேவ் பாரதிய சமாஜ் பார்ட்டி ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.

பூர்வாஞ்சல் ரீஜன் என்கிற கிழக்கு உத்த ரபிரதேசத்தில் 176 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன இங்கு சுமார் 15 சதவீதம் ராஜ்பார் என்கிற ஓபிசி இன மக்கள் இருக்கிறார்கள் 125 சட்டமன்ற தொகுதிகளில் ராஜ்பார் இன மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்.கடந்த கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பிஜேபி சுமார் 150 தொகுதிகளில் பிஜேபி சுகல்தேவ் பாரதிய சமாஜ் பார்ட்டி கூட்ட ணி வெற்றி பெற்று இருந்தது.

இதனால் ஓம்பிரகாஷ் ராஜ்பார் யோகி அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார் யோகிக்கும் ராஜ்பாருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனால் பிஜேபி சுகல்தேவ் பாரதிய சமாஜ் பார்ட்டிகூட்டணி உடைந்து கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

இப்பொழுது கூட ஓம் பிரகாஷ் ராஜ்பார் அசாதுதீன் உவைசி பீம் ஆர்மியின் சந்திரசேகர ஆசாத் உடன் கூட்டணி அமைக்கப் போவதாக கூறியிருந்தார்.இந்த நிலையில் ஓம் பிரகாஷ் ராஜ்பார் பிஜேபியுடன் கூட்டணிக்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறி இருக்கிறார்.

என்று எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

Exit mobile version