தெலுங்கானாவில் பயங்கரம் காரில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம் -அமைச்சர்,எம்எல்ஏ மகன்கள் மீது வழக்கு…

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரம் கிளப், பப், நைட் பப் என பப் கலாச்சாரம் நிறைந்த நகரமாக திகழ்கிறது. இவ்வாறான நகரத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் முழு சுதந்திரத்தோடு பார்டிகளுக்குச் சென்று வருவது சகஜமான விஷயம்தான். 

ஆனால் பப்களில் பெண்களை வயது வரம்பின் பேரிலேயே அனுமதிக்கின்றனர். இருப்பினும் சற்று அதிகார, பண பலம் வாய்ந்த குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள், சிறு வயதிலேயே பார்டிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் பதினோராம் வகுப்பு, பண்ணிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் ஒரு 17 வயது சிறுமியை சொகுசு காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து போலீஸார் தெரிவிக்கையில், 17 வயது சிறுவர்கள் 3 பேரும், 18 வயது இளைஞர் ஒருவரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களும் 17 வயது சிறுமி ஒருவரும் சக தோழியின் பிறந்த நாள் பார்டிக்காக பிரபல பப்பிற்கு சென்றுள்ளனர். 

அச்சிறுமியை பார்டி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதாக அந்த 4 சிறுவர்கள் கூறி அழைத்துச்சென்றுள்ளனர். அவர்களை நம்பி சிறுமியும் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் அச்சிறுமியை இந்த நான்கு பேரும் பார்டி முடிந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சிகப்பு நிற பென்ஸ் காரில் அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் சிறுமியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் அவரை காரிலேயே வேறு ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று அச்சிறுமியை 4 பேரும் கூட்டு பலாத்காரம் செய்து கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் சிறுமியை கொண்டு வந்து பார்டி நடந்த இடத்திலேயே காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் வீடு திரும்பிய சிறுமியின் கழுத்தில் காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமியும் நடந்த விஷயங்களை கூறியுள்ளார்.

பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜூபிலி ஹில்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளில் தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமது அலி மகன், ஐ.எம்.ஐ ஒவைசி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மகன், தெலுங்கானா மாநில வஃக்போர்டு தலைவரின் மகன் உட்பட 4 பேர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டனர். அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. மகன்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் போலீசார் அவர்களை கைது செய்வதில் மெத்தனமாக நடந்து கொள்வதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக மீடியாக்களில் ஒரு செய்தியும் வரவில்லை.வாய்மூடி மவுனம் காப்பது என் இது பாஜக ஆளும் மாநிலம் இல்லை அதனால என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தகவல்:- ஜீ நியூஸ்

Exit mobile version