“மோடியை அடிப்பேன்” என ஆணவத்தின் உச்சத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் !

“மோடியை என்னால் அடிக்க முடியும், அவமானப்படுத்த முடியும்” என மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சிதலைவர் நானா பட்டோலே கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித்தலைவர் நானா பட்டோலே அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி கவனம் பெற முயற்சிப்பார். இதனால் காங்கிரஸ் கட்சியை அடிக்கடி செய்திகளில் கொண்டு வர வைக்க இயலும் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. இந்நிலையில் தற்பொழுது பிரதமர் மோடி குறித்து மரியாதை இல்லாமல் பேசியது பொதுமக்களை கொதிப்படைய செய்துள்ளது.

பண்டாரா எனும் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் நானா பட்டோலே பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது. அதில் நானா பட்டோலே, “நான் அரசியலில் 30 ஆண்டுகாலம் இருக்கிறேன், ஐந்து ஆண்டுகளில் ஒரு அரசியல்வாதியால் ஒட்டுமொத்த சந்ததிக்கு தேவையான சொத்தை சேர்க்க முடிகிறது, நான் அப்படி இல்லை அரசிடம் எந்த வித ஒப்பந்தமும் பெற்றது கிடையாது. என்னிடம் யார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்கிறேன்.

அதனால் என்னால் மோடியை அடிக்க முடியும், அவமானப்படுத்த முடியும்” என பகீரங்கமாக பிரதமர் மீது கோபமாக பேசியுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பிரதமரை எப்படி இவ்வாறு கூறலாம் என பொதுமக்கள் பலர் கொதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து பா.ஜ.க’வின் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியதாவது, “பிரதமர் மோடியை அடிப்பேன், அவமானப்படுத்த முடியும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவிக்கிறார். பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தற்காலிகமாக நடந்ததுதானா என்று தெரியவில்லை? 138 கோடி இந்தியர்களின் பிரார்த்தனை பிரதமர் மோடியை காப்பாற்றும்” என குறிப்பிட்டுள்ளார். நானா பட்டோலின் கருத்துக்கு பொதுமக்கள் மட்டுமின்றி பிற கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Source – Junior Vikatan

Exit mobile version