பஞ்சாபிலும் காங்கிரஸ் கதை முடிகிறது பாஜகவில் இணையும் முதல்வர்.

காங்கரஸ் ஆட்சியில் உள்ள ஒருசில மாநிலங்களில் பஞ்சாபும் ஒன்று காங்கிரஸ் கதை முடிகிறது-ஏபிபி சிவோட்டர் சர்வே படி பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிந்து ஆம்ஆத்மி ஆட்சியை நெருங்கும் அளவிற்கு ஆதரவு அதிகரித்து இருக்கிறது .

ஆம்ஆத்மிக்கு 51-57 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 38-46 தொகுதிகளும் அகாலி தளம் பகுஜன் கூட்டணிக்கு 16-24தொகுதிகளும் பிஜேபிக்கு 0-1 தொகுதிக ளும் கிடைக்கும் என்று ஏபிபி சிவோட்டர்சர்வே கூறுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் 75-80 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலைமையே இருந்தது.

இதற்கு முக்கியமான காரணம் விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு பஞ்சாபில் பிஜேபிக்கு எதிராக உருவான எதிர்ப்பு தான் பஞ்சாபிகளிடம் இப்பொழுது உருவாகியுள்ள காங்கிரஸ் ஆதரவினால் காங்கிரசை யார்வழி நடத்தி சென்றாலும் ஆட்சியை பிடித்து விடலாம் என்கிற நிலைமை இருந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அம்ரீந்தர் சிங்கே இல்லை என்றாலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலையே இருந்தது.

சோனியா,ராகுல்,பிரியங்கா போன்ற அதிமேதாவிகள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கேப்டன் அம்ரீந்தர் சிங்கை ஓரங்கட்டி பஞ்சாப் ஆட்சியை தங்களின் காலடியில் படுக்க வைத்து விடலாம் என்று கனவு கண்டு அம்ரீந்தர்சிங்கிற்கு எதிராக சித்துவை கொண்டு வந்தார்கள்.சோனியா குடும்பத்திற்கு பதிலடி கொடுக்க நினைத்த அம்ரீந்தர் சிங் மோடி அரசை புகழ்ந்து கொண்டு மோடி அமித்ஷாவை சந்தித்து கை குலுக்கி கொண்டு இருந்தார்.

விவசாய சட்டங்களினால் பிஜே பியினர் மீது கொலை வெறியில் இருக்கும் சீக்கியர்கள் இதை விரும்பவில்லைஇதனால் சீக்கியர்கள் பிஜேபி எதிர்ப்பு டன் விவசாயிகள் போராட்டத்தை தூண்டி வரும் ஆம்ஆத்மியை நோக்கி திரும்பிவிட்டார்கள். காங்கிரசின் செல்வாக்கு இறங்கி விட்டது.ஆம் ஆத்மி முன்னிலைக்கு வந்து விட்டது.ஆம்ஆத்மியினால் பஞ்சாபில் ஆட்சியைகைப்பற்றும் அளவிற்கு வெற்றி பெறமுடியாது என்றாலும் யாருக்கும்மெஜாரிட்டி கிடைக்க முடியாத நிலையை ஆம்ஆத்மி உருவாக்கி விடும்.அம்ரீந்தர் சிங்கின் ஆசையும் இது தான்.

தேர்தலுக்கு பிறகு தேர்தல் தோல்விக்குசோனியா குடும்பத்தை காரணம் காட்டி. விட்டு காங்கிரசை உடைத்துக் கொண்டுவெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்து விடுவார்.அவர் ஆட்சி அமைக்க ஆம்ஆத்மிகாலிதளத்தை உடைத்து பிஜேபி துணைநிற்கும்.தேர்தலுக்கு பிறகு பிஜேபி ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் அம்ரீந்தர் சிங் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாபில் பிஜேபி எதிர்ப்பைமறைய வைத்து 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் பிஜேபியில் ஐக்கியமாகி விடுவார்.

வருகின்ற 2022 சட்டமன்ற தேர்தலில்பிஜேபி ஆட்சியில் இருக்கும் உத்தரபிரதேசம் உத்தரகாண்ட் மணிப்பூர் மற்றும்கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும்மீண்டும் பிஜேபியே ஆட்சி அமைக்கும் பஞ்சாபில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று ஏபிபி சிவோட்டர் கூறுகிறதுநான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் பஞ்சாபிலும் பிஜேபி சார்பு ஆட்சியே அமையும் என்கிறேன். ஆக 2022 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றிகாத்திருக்கிறது.

கட்டுரை:-வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version